Published : 19 Sep 2016 11:21 AM
Last Updated : 19 Sep 2016 11:21 AM

வெற்றி மொழி: ஒப்ரா வின்ஃப்ரே

1954-ம் ஆண்டு பிறந்த ஒப்ரா வின்ஃப்ரே அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக உரிமையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர், நடிகை மற்றும் கொடையாளர். மேலும், உலக கோடீஸ்வர பெண்களில் ஒருவர். தனது பெயரில் நடத்தப்படும் டாக் ஷோவின் மூலம் பிரபலமானவராக அறியப்படுபவர். உலகளவில் முன்னிலையில் உள்ள இந்த நிகழ்ச்சி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த உலக பெண்களில் ஒருவரான இவர், அமெரிக்க தொலைக்காட்சி மட்டுமின்றி உலக தொலைக்காட்சி நேயர்களிடையே அதிகம் பிரபலமானவர்.

# எங்கு போராட்டம் இல்லையோ, அங்கு வலிமையும் இல்லை.

# முன்னேற்பாடு எப்பொழுது வாய்ப்பினை சந்திக்கின்றதோ அதுவே அதிர்ஷ்டம் எனப்படுகின்றது.

# உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும்.

# நீங்கள் இங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த உலகிற்கு எப்படி வந்தீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல.

# ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம், தனது எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதே அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த கண்டுபிடிப்பு.

# நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய வேண்டுமானால், அதற்கான ஊக்கத்துடன் செயலைத் தொடங்க வேண்டும்.

# மேன்மை அடைவதற்கான மற்றுமொரு மைல்கல்லே தோல்வி.

# மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி வெற்றிகரமான மக்கள் ஒருபோதும் கவலைப் படுவதில்லை.

# நான் தோல்விகளை நம்புவதில்லை. நீங்கள் உங்கள் செயலை அனுபவித்து செய்துள்ளீர்கள் என்றால், அது தோல்வியே அல்ல.

# இந்த கணத்தில் சிறந்ததை செய்வது, அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்தில் உங்களை வைக்கின்றது.

# உங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றுங்கள். அங்குதான் உண்மையான ஞானம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

# எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாதபோது, என்னிடம் புத்தகங்கள் இருந்தன.

# ஒவ்வொரு தடுமாற்றமும் வீழ்ச்சி அல்ல மற்றும் ஒவ்வொரு வீழ்ச்சியும் தோல்வி என்று அர்த்தமல்ல.

# உங்களது காயங்களை ஞானமாக மாற்றுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x