Published : 11 Jul 2016 11:22 AM
Last Updated : 11 Jul 2016 11:22 AM

ஏடிஎம்- ல் காசோலை

தொழில்நுட்ப மாற்றத்தால் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக வங்கித்துறை கடந்த சில வருடங் களில் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுப்பதற்காக அரை நாள் விடுமுறை எடுத்தவர்கள் எல்லாம் உண்டு. அதன் பிறகு ஏடிஎம்-கள் வந்தன. கார்டு மூலம் பணம் எடுக்க முடிந்தது. பிறகு இணை யம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏடிஎம் கார்டு இல்லாமலேயே மொபைல் எண்ணை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் வசதியை வங்கிகள் கொண்டு வந்தன.

காசோலை மூலம் பணம் எடுப்பது பழைய முறைதான் என்றாலும் அதி லும், புதுமையை புகுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி காசோலையை எடுத்துக்கொண்டு வங்கி கிளைக்கு செல்லத்தேவை இல்லை, ஏடிஎம் மையங்களுக்கு செல்லலாம். ஏடிஎம் மெஷினில் காசோலையை அனுப்பினால், மெஷின் அதனை புரிந்து கொண்டு நிரப்பப்பட்ட பணத்தை கொடுக்கும்.

இதற்கான பிரத்யேக மெஷினை உலகளவில் அதிக ஏடிஎம் மெஷின் களை தயாரிக்கும் என்சிஆர் கார்ப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த ஏடிஎம் களில் 48 சதவீதம் இந்த நிறுவனத் தின் ஏடிஎம்-கள்தான். சோதனை அடிப் படையில் இப்போது இண்டஸ்இந்த் வங்கியின் குர்காவ்ன் கிளையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 நாட்க ளுக்கு முன்பு இந்த சோதனை தொடங் கப்பட்டது. இதுவரை 1,000 பரிவர்த் தனைகளுக்கு மேல் நடந்துள்ளன.

எப்படி வேலை செய்கிறது?

ஏடிஎம் மெஷினில் காசோலையை நுழைத்தவுடன், காசோலையின் புகைப்படம் கால்சென்டர் அல்லது அலுவலகத்துக்கு அனுப்பப்படும். காசோலையில் கையெழுத்து சரிபார்த்த பிறகு ஏடிஎம் மெஷின் பணத்தை வழங்கும். தற்போது குர்காவ்னில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஏடிஎம் விரைவில் மற்ற நகரங்களில் தொடங்கவும் வங்கி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்ப ஏடிஎம்-ஐ மற்ற வங்கிகளுக்கு கொடுப் பது பற்றியும் என்சிஆர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது சில பன்னாட்டு வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, இன்னும் ஓரிரு மாதங்களில் பன்னாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் போடப்படும் என்று என்சிஆர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சில சந்தேகங்கள்?

கார்டுக்கு பதிலாக காசோலை வைத்து பணம் எடுப்பது புதிய தொழில்நுட்பம்தான். ஆனால் இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.? ஏடிஎம் கார்டு, இணையம் மூலம் பரிவர்த்தனை, மொபைல் பரிவர்த்தனை என பணப்பரிவர்த் தனையின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் காசோ லையை மாற்றுவதற்கு என பிரத்யேக ஏடிஎம் பயனுள்ளதாக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தவிர காசோலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

இதையெல்லாம் விட ரிசர்வ் வங்கியின் ஆய்வின் படி மூன்றில் ஒரு ஏடிஎம் ஏதாவது ஒரு காரணத்துக் காக பழுதாகி பயன்படுத்த முடியாமல் உள்ளதாக கூறியுள்ளது. ஏடிஎம்-ல் பணம் இல்லை எனும் போது காசோலையாக இருந்தால் என்ன? கார்டாக இருந்தால் என்ன?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x