Published : 13 Jun 2016 10:24 AM
Last Updated : 13 Jun 2016 10:24 AM

ஒரு செய்தியும் அதன் விளைவுகளும்

பங்குகள் சரிவதற்கு ஒரு சிறிய செய்தி போதும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ். கடந்த வருடம் ஏப்ரலில் இந்த பங்கு பங்குச் சந்தையில் பட்டியலானது.

205 ரூபாய்க்கு வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு முதல் நாளிலேயே 40 சதவீதம் உயர்ந்து 288 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து 478 ரூபாய் வரை சென்றது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் 400 ரூபாய் என்ற அளவிலேயே இந்த பங்கின் வர்த்தகம் இருந்தது.

கடந்த மாத இறுதியில் அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் விஜய் சங்கேஷ்வர் மற்றும் ஆனந்த் சங்கேஷ்வர் புதிதாக விமான போக்குவரத்து நிறுவனம் ஒன்றினை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வந்தவுடனே இந்த பங்கு 20 சதவீதம் சரிந்தது.

சர்வதேச அளவில் பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதால், பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்து அந்த பங்கு 253 ரூபாய் வரை கீழே இறங்கியது.

இதற்கிடையே புதிய நிறுவனத்துக்கும் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை. பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகுதான் விமான நிறுவனம் தொடங்கும் முடிவை எடுத்தோம். புதிய நிறுவனத்துக்கு 1,400 கோடி ரூபாய் தேவை, இதற்காக அடுத்த சில வருடங்களில் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள எங்களுடைய பங்குகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம்.

இருந் தாலும் நிறுவனத்தில் பெரும்பான் மையான பங்குகள் எங்கள் வசம்தான் இருக்கும். இந்த நிறுவனத்துக்கும் விமான நிறுவனத் துக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் இந்த நிறுவனத்தில் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிப்போம், தகுதி வாய்ந்த நபர்கள் புதிய நிறுவனத்தை நிர்வகிப்பார்கள் என்று நிறுவனம் விளக்கம் கொடுத்தது.

இந்தியாவில் விமான போக்கு வரத்துக்கு தேவை இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உள்நாட்டு விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதனால் விமான நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் தெரி வித்தது.

ஆனால் ஒரு சில விமான நிறுவனங்களை தவிர பெரும் பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றன. பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன என்பதால் இந்த பங்கு சரிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

253 ரூபாய் வரை சரிந்த இந்த பங்கு இப்போது 310 ரூபாய் அளவுக்கு வர்த்தகமாகிறது. கிங்பிஷர் பயம் முதலீட்டாளர்களிடம் இருந்து இன்னும் நீங்கவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் இந்த சரிவை பயன்படுத்தி சில முதலீட்டாளர்கள் லாபம் சம்பாதித்திருக்கிறார்கள்.

இது குறித்து பங்குசந்தை நிபுணர் ஒருவரிடம் கேட்டோம். பொதுவாக பங்குச்சந்தையில் சரிவு வரும் போது முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் பங்குகள் உயரும் போதுதான் வாங்குகிறார்கள். சிலர் மட்டுமே சரிவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் பல பங்குகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார் கள்.

அவ்வப்போது நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள் கிறார்கள். சந்தையின் ஓட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனித்து பார்க்கும் போதுதான் இது போன்ற வாய்ப்புகள் தெரியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x