Published : 05 Sep 2016 01:01 PM
Last Updated : 05 Sep 2016 01:01 PM
அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுதான் யுபிஐ. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பண பரிவர்த்தனை உடனடியாகவும் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும். பணம் செலுத்துவோர் விபிஏ எனப்படும் விர்ச்சுவல் பேமன்ட் முகவரியை நினைவில் வைத்திருந்தால் போதும்.
அவசியம் என்ன?
மற்றெந்த வளர்ந்த நாடுகளிலும் இந்தியாவில் புழங்கும் அளவுக்கு கரன்சி புழக்கம் கிடையாது. இதனாலேயே அரசும், வங்கிகளும் ஆன்லைன், கடன் அட்டை, டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்றன. வங்கிகளில் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையில் ஓரளவு பாதுகாப்புத் தன்மை உறுதியானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமான வர்த்தகம் ஓரளவு அதிகரித்துள்ளது.
கரன்சி சார்ந்த வர்த்தகம்
இந்தியாவில் சில்லரை வர்த்தகம் பெருமளவில் நடைபெறுகிறது. இதில் அதிகபட்சமாக 7 சதவீத அளவுக்குத்தான் மின்னணு பரிவர்த்தனை மூலம் நடைபெறு கிறது. இதற்கு முக்கியக் காரணமே கரன்சியாகக் கொடுப்பது எளிது என்ற கருத்து மக்களிடையே அதிகம் காணப்படுவதுதான்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட் டுள்ள அறிக்கையில் ஏடிஎம்கள் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 73 கோடி தடவை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2 லட்சம் ஏடிஎம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தகவல் தெரிவிக்கிறது.
ஒரு தடவை பணம் எடுப்பதற்கு 5 நிமிடம் செலவாகிறது என்று வைத்துக் கொண்டால் மாதத்துக்கு 6 கோடி மணி நேரத்தை நாம் வீணடிக்கிறோம்.
இதைவிட இன்னுமொரு அதிர்ச்சி யான விஷயம் என்னவென்றால் பொது மக்களிடம் புழக்கத்துக்காக உள்ள பணத் தின் அளவு ரூ.16 லட்சம் கோடியாகும். மொத்த பணப் புழக்கத்தில் இது 95% ஆகும். இதிலிருந்து அன்றாட புழக் கத்தில் இந்தியாவின் மொத்த கரன்சியும் மக்கள் கைகளில் புரள்வது கண்கூடு.
செலவு
கரன்சி அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இதில் பாதுகாப்பு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கரன்சி அச்சடிப்பதற்கு ஆகும் செலவு ரூ.3,750 கோடியாகும்.
இது தவிர வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் ஏடிஎம்களை திறந்துள்ளன. ஏடிஎம்களை நிறுவி, அதைப் பராமரிக்க ஆகும் செலவு ஆண் டுக்கு ரூ. 15,800 கோடியாக உள்ளது.
மேலும் ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்கு வங்கிகள் சுமார் 4,132 கரன்சி சேமிப்பு நிலையங்களை அதிக பாதுகாப்புடன் நிர்வகிக்கின்றன.
மேலும் இந்த ஏடிஎம்களில் நிரப்பு வதற்காகவே ரொக்கப் பணத்தை எவ்வித உபயோகமும் இல்லாமல் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
யுபிஐ என்றால் என்ன?
மத்திய அரசு நிறுவனமான நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ), ரிசர்வ் வங்கியின் முக்கிய யோசனையான குறைந்த பணப் புழக்கம் எனும் திட்டத்தைச் செயல்படுத்த கொண்டு வந்ததுதான் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை வசதி முறையாகும்.
பணப் பரிவர்த்தனையின் முக்கிய அம்சமே உடனடி பண பரிமாற்ற சேவையை (ஐஎம்பிஎஸ்) அளிப்பதாகும். பண பரிவர்த்தனை சேவை வசதியை அளிப்பவர்கள் (பிஎஸ்பி) பண பரிமாற்றம் செய்பவர்கள் மற்றும் அதைப் பெறுபவர்களிடையிலான பாலத்தை ஏற்படுத்துபவர்களாவர். பயன்படுத்துவோரும், பணம் அளிப்போரும் வெவ்வேறு பிஎஸ்பி தளங்களை பயன்படுத்துபவராக இருக்கலாம்.
வங்கிகள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள தொகையின் அடிப்படையில் இதை செயல்படுத்தும்.
ஐஎம்பிஎஸ் தளத்தில் யுபிஐ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வாலட்களில் பணத்தை நிரப்பி அதைப் பயன்படுத்துவது போன்ற அவசியம் இல்லை. பல்வேறு வணிகர் களுக்கும் அவர்களது கணக்கிற்கு பணத்தை செலுத்த முடியும். கார்டு பற்றிய விவரம் அல்லது நெட் வங்கி பயன்பாட்டு எண் (யூசர் ஐடி) தெரிந் திருந்தால் போதுமானது. இந்த வகை யில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இரண்டு வகையில் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்யப்படும். மொபைல் போன் மற்றும் மொபைல் பின் எண் ஆகியவை கட்டாயமாக்கப்படும்.
கார்டுகளை விட இது சிறப்பானதா?
யுபிஐ செயல்பாடானது விபிஏ எனப்படும் விர்ச்சுவல் பணம் செலுத்தும் முகவரிக்கு (விபிஏ) பணம் செல்லும். ஒருவருக்கு பணம் அனுப்புவதாக இருந்தால் அவரது பெயர், வங்கி மற்றும் பிற விவரங்களைத் தெரிவித்து அனுப்பினால் போதும். அவரது கணக்கில் பணம் சேர்ந்துவிடும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் இதைப் பயன்படுத்தலாம். கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு விவரத்தை அளிப்பதற்குப் பதிலாக யுபிஐ அடையாள எண் விவரத்தை அளித்தால் பணப் பரிவர்த்தனை ஆன தகவல் உங்களுக்கு வந்து சேரும். இதில் ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இப்போது இந்த வசதியை 21 வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
யுபிஐ போன்ற டிஜிட்டல் தீர்வுகள் வெற்றி பெறுவதேன்?
ஸ்மார்ட்போன் உபயோகம் அதிகரிப்பது மற்றும் டிஜிட்டல் பேமன்ட் முறை பெருமளவில் கவனம் பெறுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிக மான மொபைல்போன் உபயோகப் படுத்தப்படுகிறது. இதில் 24 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக் கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் இது 52 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய கண்ணாடியிழை கேபிள் ஒருங்கிணைப்பு மூலம் 2.5 கோடி கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் தகவல் பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 22 கோடி வங்கிக் கணக்குகள் மற்றும் 18 கோடி டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதை எளிதாக்கியுள்ளது.
இத்தகைய சூழலில் யுபிஐ மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பணப் பரிவர்த்தனையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நெஃப்ட் (என்இஎப்டி), ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட முறைகளை இது மாற்றியமைக்கும்.
ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நவீன வங்கிகளில் அதிக அளவு வர்த்தகம் ஆன்லைன் மூலமாகத்தான் நடக்கிறது. மேலும் இந்த வங்கியின் பகுதியளவி லான, கிராமப் பகுதிகளில் உள்ள கிளைகளிலும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இது ஆண்டுதோறும் 30% அளவுக்கு வளர்ச்சியை எட்டி வருகிறது. வாடிக்கையாளர் உபயோகிக் கும் வகையில் எளிமையான மின்னணு பரிவர்த்தனை முறைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
குறைந்த அளவில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகர் இடையிலான பரிவர்த் தனைக்கு யுபிஐ வழி வகுக்கும்பட்சத்தில் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு இருக்கும். இது ஒட்டுமொத்த பண பரிவர்த்தனை சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT