Published : 04 Jul 2016 10:25 AM
Last Updated : 04 Jul 2016 10:25 AM
ராஜ்கமல் ராவ் தொடர்ந்து தவறான காரணங் களுக்காகவே இந்திய வங்கி கள் அன்றாடம் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. வாராக் கடனும் நிரந்தர பிரச்சினையாக இருப் பதால் வங்கித் துறையின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சினை குறித்து நாடு முழுவதும் விவாதமும் எழுந்துள்ளது. ஊழியர்கள் செலவு, கடனால் ஏற்பட்ட நஷ்டம் என வங்கித்துறையே சிரமத்தில் இருக் கிறது. இது ஒரு புறம் இருக்க அமைதி யாக வங்கிகள் அன்றாட பணப்பரிமாற் றத்திற்கான கட்டணத்தை உயர்த்தியுள் ளன. வங்கிகள் டிஜிட்டல் மயத்திற்கு முழுவதுமாக சென்று கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதன் செலவை வாடிக்கையாளரின் மீது சுமத்துகிறதா என்ற ஐயமும் ஏற்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த செயல்முறைகள்
2009-ம் ஆண்டு தேசிய எலெக்ட் ரானிக் நிதிப் பரிமாற்றம் (NEFT) பேமெண்ட் முறை இந்தியாவில் அறி முகப்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக் காவில் இன்னும் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படவில்லை. பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ, சிட்டி பேங்க் ஆகிய வங்கிகள் 2012-ம் ஆண்டு வெயில் காலத்தில் மட்டுமே இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. இந்தச் சேவையில் நாம் முன்னோடிதான்.
அதே போல இந்தியாவில் வாடிக்கை யாளர் எளிதாக கையாளும் விதமாக எஸ்எம்எஸ் சேவையை வங்கிகள் வழங்கிவருகிறது. ஒவ்வொரு பரிமாற் றத்தின் போதும் ஒரு முறை கடவுச்சொல் மொபைலுக்கு அனுப்பப்பட்டு உறுதிச் செய்யப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் அதிக பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
தற்போது வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் 100 கோடிக்கு மேல் பரிமாற்றங் கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பெரிய பெரிய லெட்ஜர்களில் தற்போது பரிமாற்ற விவரங்கள் எழுதி வைக்கப்படுவதில்லை. அனைத்து தகவல்களும் கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்படுகிறது. வங்கிகள் ஆயிரம் கோடி காகிதங்களை தற்போது மிச்சப்படுத்தப்படுத்தி வருகின்றன. இது போன்ற தொழில்நுட்ப வசதிகள் வங்கித்துறையை மேம்படுத்தி விட்டது. குறிப்பாக வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளருடன் தொடர்பில் இல்லாமலேயே அவர்களது கணக்குகளை கையாள முடிகிறது. அதனுடன் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வங்கி அலுவலர்களின் பணிச்சுமையும் தற்போது குறைந்துள்ளது.
பயன் யாருக்கு?
ஆனால் இந்தச் பணிச்சுமை குறைந் ததன் பயனை வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்குகிறதா என்றால் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில் வங்கிக்கு சென்றுதான் செய்ய வேண்டியிருந்தது. வங்கிகளும் இதைச் சமாளிக்க முடியாமல் திணறின. அதுமட்டுமல்லாமல் அதிக ஊழியர்களும் தேவைப்பட்டனர். ஆனால் தற்போது அனைத்தும் இ-பரிமாற்றம் மூலமே நடைபெறுகிறது. வாடிக்கையாளர் வங்கிகளுக்கு செல்வதே குறைந்துவிட்டது. இதனால் வங்கிகள் பலன் அடைகிறது. ஆனால் இந்த பலனை வாடிக்கையாளருக்கு வழங்குவதில்லை. மாறாக குறிப்பிட்ட இ-பரிமாற்றத்திற்கு பிறகும் ஒரு சில வங்கிகள் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 10 ரூபாய் வரை பிடித்தம் செய்கின்றன.
அதேபோல் சாதாரணமாக வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதை காட்டிலும் ஏடிஎம்களில் சென்று பணம் எடுப்பது வங்கிகளின் செலவை பெரும்பான்மையாக குறைத்துள்ளது. ஆனால் எஸ்பிஐ போன்ற வங்கிகள் வருடத்திற்கு ஏடிஎம் கார்டுகளுக்கு 172 ரூபாய் வரை வாடிக்கையாளரிடம் வசூலிக்கிறது.
அதேபோல் வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு ஒரு காலாண்டுக்கு 30 ரூபாய் என்று வாடிக்கையாளரிடம் வசூலிக்கின்றன. ஆனால் இது போன்ற சேவைகள் அனைத்தும் அமெரிக்காவில் இலவசமாக வழங்கப் படுகிறது.
வேறு வழிகள்
வங்கிகள் பல்வேறு கட்டணங்கள் மூலம் லாபம் ஈட்ட முடியும். உதாரண மாக. லாக்கரில் நகை வைப்பதற்கான கட்டணம், காசோலையை நிறுத்தி வைப்பதற்கு கட்டணம் இது போன்று பல வகைகளில் வசூலிக்க முடி யும். இவையாவும் இந்தச் சேவையை கோரும் வாடிக்கையாளரிடம் வசூலிக்க முடியும். ஆனால் இது போன்ற நடவடிக் கைகளை வங்கிகள் எடுப்பதில்லை.
உயர்ந்து வரும் வங்கிகளின் நஷ்ட மும் ஊழியர்களின் கோரிக்கைகளும் தொடர்ந்து இருப்பதால் இது போன்ற பரிமாற்றத்திற்கான கட்டணம் நம் காலடியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரானிக் நடைமுறைகள் அதிகமாக வந்துவிட்ட போதிலும் கட்டணங்களை வாடிக்கை யாளரின் தோளிலேயே வங்கிகள் சுமத்துகின்றன.
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை செயல்படுத்துவதற்கு மட்டும் முக்கியத் துவம் கொடுக்காமல் வங்கித்துறையில் இது போன்ற நடவடிக்கைகளுக்கும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT