Published : 04 Jul 2016 11:53 AM
Last Updated : 04 Jul 2016 11:53 AM
நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும் நாட்டிலுள்ள முக்கால்வாசி மக்கள் விரும்பி பார்ப்பது கிரிக்கெட்தான். கிரிக்கெட் விளையாட்டுக்குத்தான் தேசிய விளையாட்டு போல மதிப்பளிக்கப்படுகிறது. வீரர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், தோனி, விராட் கோலி என பல இந்திய வீரர்கள் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
ஒரு கிரிக்கெட் வீரர் மைதானத்துக்கு உள்ளே கிரிக்கெட் விளையாடி சம்பாதிப்பதை விட மைதானத்துக்கு வெளியே அதிகமாக சம்பாதிக்கிறார். இதற்கு காரணம் அவர்களின் திறமைதான். தோனியின் அதிரடி ஆட்டம், ‘கேப்டன்சி' என்கிறபெயர் அனைத்தும் அவருக்கு உலகப் புகழை பெற்று தந்துள்ளன. அதே போல் பல்வேறு நிறுவனங்களும் அவரை விளம்பர தூதராக நியமித்து வருகிறது. அதேபோல் விராட் கோலியின் ஆக்ரோஷ விளையாட்டு, டெஸ்ட் அணியின் கேப்டன் என தோனிக்கு அடுத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர். இவரும் விளம்பர உலகில் கொடிக் கட்டி பறக்கிறார்.
இந்திய கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னர்களாக திகழும் தோனி, விராட் கோலி இருவர் குறித்தும் சில தகவல்கள்…
2005-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 183 ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்கவைத்த தோனிக்கு அடுத்தடுத்து ஏறுமுகம் தான்.
இவரது ஆண்டு வருமானம் ரூ.119.33 கோடி
2015-ம் ஆண்டு தகவல் படி மகேந்திர சிங் தோனியின் பிராண்ட் மதிப்பு ரூ.135 கோடி
2015-ம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி பெற்ற இடம் - 23.
20-20 ஓவர் உலக கோப்பை, உலக கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் என அனைத்து கிரிக்கெட் வகைகளிலும் தோனி கேப்டனாகவும் வீரராகவும் செய்த சாதனைகள் ஏராளம்.
ஒரு நாளைக்கு தோனிக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.5 கோடி
பெப்ஸிகோ, ரிபோக், எக்ஸைடு, டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், பாரத் பெட்ரோலியம், டைடன், பிக் பஜார், பூஸ்ட் என பல நிறுவனங்கள் தோனியை விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறது.
2015-ம் ஆண்டு ஸ்பான்சர்ஷிப் மூலம் தோனி சம்பாதித்த தொகை 2,70,00,000 டாலர்
2005-ம் ஆண்டு முதல் தோனியின் விளம்பர விவகாரங்களை கேம்பிளான் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம்தான் நிர்வகித்து வந்தது.
2010-ம் ஆண்டிலிருந்து தோனியின் நண்பரான அருண் பாண்டேவின் ரித்தி ஸ்போட்ர்ஸ் நிறுவனம் தோனியின் விளம்பர விவகாரங்களைக் கையாண்டு வருகிறது.
ஸ்போர்ட்ஸ்பிட் என்ற பிட்னஸ் நிறுவனத்தை 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
தோனியின் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதற்கு அவருக்கு வழங்கப்படும் தொகை ரூ.6 கோடி
கோலி
மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து தற்போதைக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றவர்.
2008-ம் ஆண்டு நடைப் பெற்ற 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தவர். அதற்கு பிறகு ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து முதல் நிலை வீரராக இருந்து வருகிறார்.
இவரது ஆண்டு வருமானம் ரூ.104.78 கோடி
ஒரு நாளைக்கு வழங்கப்படும் தொகை ரூ.2 கோடி
2008-ம் ஆண்டு முதல் கோலியின் விளம்பர விவகாரங்களை கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அண்ட் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் கவனித்து வருகிறது.
2013-ம் ஆண்டிலிருந்துவிராட் கோலி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
4 - இந்தியாவின் அதிக மதிப்புமிக்க பிரபலங்களில் விராட் கோலியின் இடம்.
நிக், பெப்ஸிகோ, டெயோடோ ஆகிய நிறுவனங்களுக்கு முதன்மை விளம்பர தூதராக இருந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல்13 நிறுவனங்களோடு தற்போது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள், பிட்னஸ் நிறுவனங்கள் மீது தற்போது முதலீடு செய்து வருகிறார்.
எப்சி கோவா கால்பந்து அணியுடன் விராட் கோலி ஒப்பந்தம் செய்துள்ளார். வருடத்திற்கு ஒரு கோடி ரூபாயை இதில் முதலீடு செய்ய இருக்கிறார்.
கோலியின் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதற்கு அவருக்கு வழங்கப்படும் தொகை ரூ. 8 கோடி. இவரது பேட்டில் எம்ஆர்எப் நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
கர்நாடகாவைச் சேர்ந்த சிசெல் என்ற பிட்னெஸ் நிறுவனத்தோடு பங்குதாராராக விராட் கோலி இணைந்துள்ளார். பல கிளைகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT