Published : 20 Jun 2016 11:06 AM
Last Updated : 20 Jun 2016 11:06 AM

ஹெல்மெட் இல்லையேல், பெட்ரோல் கிடையாது

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தாலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

போரில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத் தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 2014-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 4.5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தான் மிக மிக அதிகம்.

வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். அரசு இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீஸார் அதிகம் உள்ள நகர்ப்பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து செல்வோர், புறநகர்ப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை பயணத் தின்போது ஹெல்மெட் அணிவதில்லை.

போக்குவரத்து போலீசார் பல்வேறு விளம்பரங்கள், விழிப்புணர்வு பேரணிகள் நடத்தியும் கடுமையான அபராதங்கள் விதித்தும் ஹெல்மெட் இல்லாமல் செல்லுவோரின் எண் ணிக்கையைக் குறைக்க முடியவில்லை.

ஒடிசா மாநில காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க நூதன வழியைக் கடைப்பிடித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு உத்தரவை காவல்துறை பிறப்பித் துள்ளது.

அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் நிரப்பக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவாகும். இந்த உத்தரவு ஜூன் 20 முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கான சுற்றறிக்கையை அனைத்து பெட்ரோல் நிரப்பு நிலை யங்கள், அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களுக்கு அனுப்பிவிட்டதாக கட்டாக் மாவட்ட காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெட்ரோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர் களுடனான கூட்டத்துக்கும் காவல் துறை ஏற்பாடு செய்து ஹெல்மெட் அணிவதன் அவசியமும், அதற்கு அவர் களின் ஒத்துழைப்பு தேவை என்பதும் வலியுறுத்தப்பட்டதாக அரோரா தெரி வித்தார். உரிமையாளர்கள் கட்டாயம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக காவல்துறையும் இந்த முறையைப் பின்பற்றலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x