Published : 15 Aug 2016 02:52 PM
Last Updated : 15 Aug 2016 02:52 PM

வெற்றி மொழி: மகாத்மா காந்தி

1869 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பள்ளிப்படிப்பிற்கு பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். தென்னாப்பிரிக்காவில் பணியாற்றியபோது இவருக்கு ஏற்பட்ட இனபாகுபாடு மற்றும் நிறவெறி போன்ற அனுபவங்களே மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக காரணமாக அமைந்தது. சத்தியாகிரகம் என்னும் அறவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இவரது அறவழி கொள்கைகள் இந்தியா மட்டுமின்றி வேறுசில உலக நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்தநாள் காந்தி ஜெயந்தி என்று முக்கிய தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது.



* பலவீனத்தால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பு என்பது வலிமையின் குணம்.

* தங்கம் மற்றும் வெள்ளி செல்வமல்ல, உடல்நலனே உண்மையான செல்வம்.

* எனது மதம் உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டது.

* நேர்மையான கருத்து வேறுபாடு முன்னேற்றத் திற்கான நல்ல அறிகுறி.

* எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு வாழ்க்கை இருக்கின்றது.

* மனிதகுலத்தின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி அஹிம்சை.

* என் வாழ்க்கையே எனது செய்தியாக உள்ளது.

* கோபம் மற்றும் சகிப்பின்மை ஆகியவை சரியான புரிதலின் எதிரிகள் ஆகும்.

* வன்முறையின் மிக மோசமான வடிவம் வறுமை.

* என்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் என்னை புண்படுத்த முடியாது.

* மனிதநேயம் ஒரு கடல்; கடலின் சில துளிகள் அசுத்தமானால், முழு கடலும் அசுத்தமாவ தில்லை.

* மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிய சிறந்த வழி.

* மனிதனின் தேவைகளுக்கான விஷயங்கள் இந்த உலகில் போதுமான அளவு உள்ளது. ஆனால், அவனின் பேராசைக்கு இல்லை.

* எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை.

* ஒரு அவுன்ஸ் பயிற்சி என்பது டன் கணக்கான போதனைகளைவிட அதிகம் மதிப்பு வாய்ந்தது.

* ஒரு நாட்டின் கலாச்சாரம் அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் வாழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x