Published : 02 Jan 2017 10:56 AM
Last Updated : 02 Jan 2017 10:56 AM

வெற்றி மொழி: ஜான் டி ராக்ஃபெல்லர்

1839 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜான் டி ராக்ஃபெல்லர் அமெரிக்க தொழிலதிபர் மற்றும் மிகச்சிறந்த கொடை வள்ளல். ஆரம்பகால இருபதாம் நூற்றாண்டின் பெட்ரோலிய சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். தனது அறிவாற்றலாலும் அயராத உழைப்பாலும் ஸ்டாண்டர்ட் எண்ணெய் நிறுவனத்தை நிறுவி உலகப் பணக்காரராக உருவெடுத்தார். ஏழ்மை ஒழிப்பு மற்றும் கல்விக்காக பெருமளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளார். தனது வாழ்நாளில் ஐநூறு மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையை பல்வேறு பணிகளுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.

# பணக்காரராக வேண்டும் என்பது மட்டுமே உங்களது ஒரே இலக்காக இருந்தால், உங்களால் ஒருபோதும் அதை அடைய முடியாது.

# உயர்ந்த மக்களின் பணியை சராசரி மக்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை செயல்படுத்துவதே நல்ல தலைமை.

# பெரும் செல்வம் படைத்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கருதுவது தவறானது.

# விடாமுயற்சியின் தரத்தைவிட வேறு எந்த பண்பும் மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கவில்லை.

# தேவையில்லாமல் மற்றொருவரின் நேரத்தை ஆக்கிரமிக்க ஒரு மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை.

# தொழிலாளரின் கண்ணியத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

# சிக்கனம் என்பது நன்கு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு அவசியம் என்பதை நான் நம்புகிறேன்.

# செல்வத்தைப் பற்றிய ஒரே கேள்வி என்னவென்றால், அதை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய் என்பதே?

# நட்பால் கண்டறியப்பட்ட வணிகத்தை விட, வணிகத்தால் கண்டறியப்பட்ட நட்பே சிறந்தது.

# புகழ், குணம் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதே ஒரு இளைஞனுக்கான மிகவும் முக்கியமான விஷயம்.

# ஒவ்வொரு தோல்வியையும் வாய்ப்பாக மாற்றுவதற்கு நான் எப்போதும் முயற்சித்தேன்.

# மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதும் ஒருவித முதலீடே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x