Published : 06 Jun 2016 03:03 PM
Last Updated : 06 Jun 2016 03:03 PM
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று. 170 ஆண்டுகள் பழமையானது என்கிற வரலாற்று பெருமையும் கொண்டது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் நலனுக்காக தொடங்கி மேம்படுத்திய ரயில்வே துறை இன்று மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்து பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் ஆரம்பித்து இன்று புல்லட் ரயில் வரை வளர்ந்து நிற்கும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பிரமாண்டமானது. சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என ரயில்வே துறையின் வருமானமும் அதிகமானது.
2016-17-ம் ஆண்டில் ரயில்வேயின் வருமானம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி பல்வேறு துணை நிறுவனங்களும் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றும் இந்திய ரயில்வே பற்றி சில தகவல்கள்…
# முறையான ரயில்சேவை அறிமுகம் செய்யப்பட்டது 1853 ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மாலை 3.30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க மொத்தம் 400 பயணிகளுடன் போர் பந்தரிலிருந்து புறப்பட்டது.
# 1925-ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் ரயில் சேவை மும்பை மற்றும் குர்லா நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
# 1929-ம் ஆண்டு 66,000 கிலோ மீட்டருக்கு ரயில்வே இருப்பு பாதை போடப்பட்டது. அப்போது ரயில்வே துறையின் மொத்த மதிப்பு 68.7 கோடி யூரோ.
# 1853-ம் ஆண்டு மும்பைக்கும் தாணேவுக்கு இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது.
# ஒரு நாளைக்கு 2.5 கோடி பயணிகள் இந்திய ரயில்களில் பயணிக்கிறார்கள்.
# ஒரு நாளில் இந்தியாவில் 11,000 ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டதட்ட 60,000 கிலோ மீட்டர் பாதையை இந்த ரயில்கள் கடக்கின்றன.
# 2014-15ம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 1,63,400 கோடி. ரூ. 40,200 கோடி ரூ.1,06,900 கோடி பயணிகள் கட்டணம் மூலம்.
# இந்திய ரயில்வேயில் 2013-ம் ஆண்டு தகவலின்படி மொத்தம் 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
# இந்திய ரயில்வே 16 ரயில்வே மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
# இந்தியாவின் மிகச் சிறிய தொலைவு இயங்கக்கூடிய ரயில்கள் நாகபுரி - அஜ்னி வழித்தடத்தில் இயங்குகிறது. இதன் தூரம் 3 கிலோ மீட்டர் மட்டுமே.
# இந்தியாவின் மிகப் பழமையான தற்போதும் இயங்கக்கூடிய ரயில் இன்ஜீன் ஃபேரி குயின். இது 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
# ரயில்வே பட்ஜெட் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்ரீரம்பூர் மற்றும் பெல்லாப்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் ஒரே இடத்தில் உள்ளன.
# தாமதத்திற்கு பெயர் போன ரயில் குவஹாத்தி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ். சராசரியாக 10-12 மணி நேரம் எப்பொழுதும் தாமதமாகத்தான் வரும் என்கிறது தகவல்கள்.
# ரயில்வே துறை வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக தற்போது இந்தியாவில் புல்லட் ரயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
# மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே 527 கிலோ மீட்டருக்கு இயக்க தற்போது திட்டமிட்டப்பட்டுள்ளன.
# இந்த புல்லட் ரயில் மணிக்கு 325 கிலோ மீட்டர் வேகத்துக்கு செல்லக்கூடியது.
# இதை நடைமுறைப்படுத்த 97 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்ட நிலையில் ஜப்பான் 76 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
# பிரிட்டிஷ் ரயில்வே பொருளாதார அறிஞர் வில்லியம் அக்வொர்த் அடங்கிய கமிட்டி பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வேத் துறையை மட்டும் பிரித்து தனி பட்ஜெட்டாக அறிவிக்க வேண்டும் என்று 1920-ம் ஆண்டு பரிந்துரைத்தது. அதன்படியே ரயில்வே பட்ஜெட் தனியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சுதந்திர இந்தியாவிலும் இந்த நடைமுறை கடை பிடிக்கப் படுகிறது.
# மஹாராஜா எக்ஸ்பிரஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், தி கோல்டன் சேரியட், டெக்கான் ஒடிஸி என பல்வேறு சொகுசு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
# இந்த ரயில்களின் கட்டணம் லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால் மிகப் பெரிய சொகுசு ஹோட்டல்களில் இருக்கக்கூடிய வசதிகள் இந்த ரயில்களில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
# இந்த ரயில்களின் கட்டணம் லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால் மிகப் பெரிய சொகுசு ஹோட்டல்களில் இருக்கக்கூடிய வசதிகள் இந்த ரயில்களில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
# இந்தியாவில் முதன்முதலில் கொல்கத்தாவில்தான் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1984-ம் ஆண்டு முதல் கொல்கத்தா மெட்ரோ ரயில் செயல்படத் தொடங்கியது. அதன் பிறகு டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் 1998ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
# கொல்கத்தா, டெல்லி மட்டுமல்லாமல் மும்பை, குர்காவ்ன், ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் இயங்குகிறது.
#டெல்லி மெட்ரோ ரயிலில் மட்டும் நாள் ஒன்றுக்கு 23 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT