Published : 15 Aug 2016 03:06 PM
Last Updated : 15 Aug 2016 03:06 PM

ஆன்லைனில் ஹெலிகாப்டர் வாடகைக்கு...



சில வருடங்களுக்கு முன்பு தொழில் நுட்பத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்கிறது என்றால் அதனை பயத்துடன் அணுகினார்கள். ஏடிஎம் கார்டு வந்த சமயத்தில் அதெப்படி ஒரு கார்டு பணம் கொடுக்கும். கார்டு மூலம் ஏன் பணம் எடுக்கனும், கார்டு தொலைந்தால், திருடு போய்விட்டால் என்ன செய்வது போன்ற பய உணர்ச்சி இருந்தது. அதனால் ஏடிஎம் கார்டை பலரும் பயன்படுத்தாமலேயே இருந்தனர். பலரும் பயன்படுத்த தொடங்கி, பின்னர் சிக்கல்கள் இல்லை என்று நம்பிக்கை வந்த பிறகுதான் பலரும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தத் தொடங்கினர்.

இதுபோல மாறிவரும் தொழில் நுட்பங்கள் மீதான பயம் இப்போது கிடையாது என்றே சொல்லலாம். புதிதாக மாற்றம் வந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித் துள்ளது.

இந்தியாவில் இ-காமர்ஸ் துறை யில் பிளிப்கார்ட் நுழைந்தபோது புத்தக விற்பனை மட்டும்தான் செய் தது. இன்றோ ஆன்லைன் மூலம் கார் வாங்கிவிடலாம் என்கிற நிலைமை உள்ளது. விமான பயணச் சீட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்றாலும், பொழுது போக்குக்காக ஹெலிகாப்டர்களை பிரத்யேகமாக வாடகைக்கு விடும் இணையதளங்கள் வந்து விட்டன. விமான நிறுவனங்களாக இருந் தவை, இணையதளம் மற்றும் இந்த வசதியை அறிமுகம் செய்வது ஒருபுறம் இருக்க, ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இப்போது இதில் கவனம் செலுத்தி வருகின்றன.

http://droom.in/ இந்த இணைய தளம் 2014-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. `செகன்ட் ஹேன்ட்’ எனப் படும் பயன்படுத்திய இரு சக்கர வாக னங்கள் மற்றும் 4 சக்கர வாகனங் களை வாங்க, விற்கவும் தொடங்கப் பட்டது இப்போது இந்த இணைய தளத்தில் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். தேவைப்பட்டால் வாட கைக்கு எடுத்துக்கொள்ளவும் முடியும். 47 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர்களை சொந்தமாக வாங்க முடியும்.

விமானத்தில் பறப்பதே பலருக் கும் வாழ்நாள் சாதனையாக இருக் கும் பட்சத்தில் யார் பிரத்யேக ஹெலி காப்டரை வாடகைக்கு எடுப்பார்கள், வாங்குவார்கள் என்னும் கேள்வி புரிந்து கொள்ளக்கூடியதே. இந்த சேவை ஆரம்பித்த போது ட்ரூம் நிறுவனத்தின் நிறுவனர் சந்தீப் அகர் வால் கொடுத்த பதிலில் கேள்விக் கான விடை கிடைக்கக்கூடும்.

`சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முதல் பத்து இடங்களில் இந்தியா இருக்கும். மேலும் ஹெலிகாப்டர்களை பிரத்யேகமாக வாங்குவது மற்றும் பிரத்யேகமான பயணம் செய்வது வருங்காலத்தில் அதிகரிக்ககூடும். இந்த சந்தை பிரிவை கைப்பற்ற முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இது விமானப்பயணம் என்று அவர்கள் பொஷிசன் செய்யாமல், பொழுதுபோக்கு என்று பிரபலப் படுத்துவதால் நீர் போக்குவரத்திலும் அவர்கள் கவனம் செலுத்த திட்டமிட் டிருக்கிறார்கள்.

தவிர குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் உபெர் நிறுவனத்துடன் ட்ரூம் கைக்கோர்த்தது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளில் உபெர் வாடிக் கையாளர்கள் ஹெலிகாப்டர்களில் பயணிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.

சரி, ஒருவர் எதற்காக பிரத்யேக மாக பயணிக்க வேண்டும் என்ற கேள்வி தோன்றலாம். பிறந்தநாள் விழா, பேச்சிலர் பார்ட்டி என காரணத் துக்கா பஞ்சம். பணம் இருக்கிறவங்க பறக்குறாங்க!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x