Published : 18 Jul 2016 11:25 AM
Last Updated : 18 Jul 2016 11:25 AM
1729 ஆம் ஆண்டு முதல் 1797 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எட்மண்ட் பர்க் அயர்லாந்து நாட்டில் பிறந்து பின்பு பிரிட்டனில் குடியேறிய தத்துவஞானி மற்றும் ராஜதந்திரி. ஆசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளரும் கூட. லண்டனில் பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அரசியலமைப்பின் வரம்புகள், வரிவிதிப்பு, பிரெஞ்சுப் புரட்சி, அயர்லாந்து மற்றும் இந்திய பிரச்சினைகள் போன்றவற்றை தனது எழுத்திலும் பேச்சிலும் கையாண்டவர். அரசியல் கோட்பாடு வரலாற்றில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.
நம்முடன் போராடுபவனே நமது நரம்புகளை வலுப்படுத்துகிறான், நமது திறமையைக் கூர்படுத்துகிறான். ஆக, நமது எதிரியே நமக்கு உதவுபவன்.
புகழ்ச்சியானது புகழ்பவர் மற்றும் புகழப்படுபவர் இருவரையும் பாழ்படுத்தி விடுகின்றது.
கரகோஷம், உயர்ந்த மனதிற்கு தூண்டுகோலாகவும், பலவீன மனதிற்கு இறுதியானதாகவும் உள்ளது.
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், அப்படியானாலும் அந்த விரக்தியிலும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.
மாற்றம் என்னும் உயரிய சட்டத்திற்கு நாம் அனைவரும் கீழ்படியவேண்டும். இதுவே இயற்கையின் அதிக சக்திவாய்ந்த சட்டமாகும்.
அழகு என்பது மகிழ்ச்சியின் வாக்குறுதியினைப் போன்றது.
ஒவ்வொரு நிலத்திலும் வளரக்கூடிய களைச்செடியே அடிமைத்தனம்.
உடலுக்கு உணவு எப்படியோ, அதுபோலவே மனதிற்கு உண்மை.
பிரதிபலிப்பு இல்லாத படித்தல் என்பது செரிமானம் அடையாத உணவைப் போன்றது.
நமது வலிமையை விட அதிகமானவற்றை நமது பொறுமையின் வாயிலாக அடைய முடியும்.
ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்பு முறையே அனைத்து விஷயங்களுக்குமான அடித்தளம்.
மனித மனதில் நாம் கண்டறியக்கூடிய முதல் மற்றும் எளிய உணர்ச்சி, ஆர்வம்.
கடந்த காலத்தின் மூலம் உங்களால் ஒருபோதும் எதிர்காலத்தை திட்டமிட முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT