Published : 27 Jun 2016 10:25 AM
Last Updated : 27 Jun 2016 10:25 AM

வெற்றி மொழி: தலாய் லாமா

தலாய் லாமா என்பது திபெத்திய புத்த மதத்தின் தலைமை பொறுப்பினைக் குறிப்பிடும் பெயராகும். 1935 ஆம் ஆண்டு பிறந்த டென்சின் கியாட்சோ என்பவரே பதினான்காவது தலாய் லாமா ஆவார். இவரே திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் மற்றும் உலகளவில் முக்கிய தலைவராகவும் கருதப்படுகிறார். தியானம் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியலிலும் ஆர்வம் உடையவர். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள இவர், 150க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நேர்மறையான நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு, நேர்மறையான பார்வையை உருவாக்க வேண்டும்.

எப்போதெல்லாம் சாத்தியமாகிறதோ அப்போதெல்லாம் அன்பாக இருங்கள். இது எப்போதும் சாத்தியமாகும்.

சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுப்பதில் நடைமுறையில், ஒருவருடைய எதிரியே சிறந்த ஆசிரியராக இருக்கின்றார்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால், நல்லது. ஆனால், அது இல்லாமலும் உங்களால் வாழமுடியும்.

கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரணமான விஷயம்.

மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழமுடியும்; ஆனால், மனித நேசம் இல்லாமல் நம்மால் வாழமுடியாது.

நாம் நம்மிடம் அமைதியை ஏற்படுத்தாதவரை, நம்மால் வெளி உலகில் ஒருபோதும் அமைதியைப் பெறமுடியாது.

தூக்கம் என்பது மிகச்சிறந்த தியானம் ஆகும்.

மகிழ்ச்சி என்பது ஏற்கெனவே தயாராக இருக்கும் விஷயமல்ல; அது உங்கள் சொந்த நடவடிக்கைகளில் இருந்து வருவது.

அறியாமை நமக்கு ஆசானாக இருக்கும் இடத்தில், உண்மையான அமைதிக்கான சாத்தியம் இல்லை.

இந்த வாழ்க்கையில் நமது முதன்மையான நோக்கம், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே. உங்களால் உதவ முடியவில்லை என்றால், குறைந்தது புண்படுத்தாமலாவது இருங்கள்.

கோயில்களுக்கு அவசியமில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை; நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நமது கோயில், கருணையே தத்துவம். இதுவே எனது எளிய மதம்.

நமது வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே.

அன்பு மற்றும் கருணை ஆகியவை ஆடம்பரமானவை அல்ல, அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x