Published : 05 Sep 2016 12:52 PM
Last Updated : 05 Sep 2016 12:52 PM

பாஸ்மதி அரிசி

அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்தகமாகிறது. `வாசனை முத்து’ என்கிற பட்ட பெயரும் இதற்கு உள்ளது.

> 8.4 மிமீ வரை நீளம் கொண்டது.

> 20-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் விளைகிறது.

> இந்தியாவில் வட மேற்கு மாநிலங்களில் விளைகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், டெல்லி, உத்தராகாண்ட், பிஹார் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும், பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 70 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் விளைகிறது.

> சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.

> இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் பாஸ்மதி 1 %

> உற்பத்தி ஏற்றுமதி ஆண்டு வளர்ச்சி வீதம் 21 %

> பாஸ்மதி அரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான காப்புரிமையை இந்தியா பெற்றுள்ளது. காப்புரிமை பெறுவதில் அமெரிக்காவின் ரைஸ் டெக் நிறுவனத்துடன் போட்டி உருவானது.

> 2015-16 நிதியாண்டில் மிக அதிக அளவாக 40,45,796.25 மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 22,718.44 கோடியாகும்.

> சவுதி அரேபியா, ஈரான், அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து ஐரோப்பிய நாடுகள் வருகின்றன. அதிக இறக்குமதி செய்யும் நாடு சவுதி அரேபியா.

சில பாரம்பரிய ரகங்கள்

* பாஸ்மதி ஸேப்டா

* பிந்தி

* டிலக்

* ஹன்ஸ்ராஜ்

ஏற்றுமதி அதிகரிக்கும் காலம்

* மார்ச்-ஏப்ரல்

* நவம்பர்-டிசம்பர்

முன்னணி 10 பிராண்டுகள்

* லால் குயூலா

* ஹனுமன் பாஸ்மதி

* கோஹிநூர்

* இந்தியா கேட்

* ஏரோப்ளேன் பாஸ்மதி

* அமிரா

* பெஸ்ட்

* மெஸ்பன்

* சன்கோல்டு

1996 இந்திய விதைகள் சட்டத்தின்படி முக்கிய சாகுபடி ரகங்கள்

பாஸ்மதி 386

பாஸ்மதி 217

ரன்பிர் பாஸ்மதி

கார்னல் லோக்கல்/ டராவ்ரி பாஸ்மதி

பாஸ்மதி 370

டைப்-3 (டேராடூனி பாஸ்மதி)

புசா பாஸ்மதி-1

புசா பாஸ்மதி-1121

பஞ்சாப் பாஸ்மதி-1

ஹரியாணா பாஸ்மதி-1

கஸ்தூரி

மஹி சுகந்தா

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x