Published : 19 Sep 2016 11:59 AM
Last Updated : 19 Sep 2016 11:59 AM
ஆப்பிள் வாட்ச் 2
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதனுடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்சுகளை அறிமுகப் படுத்தியுள்ளது. வை-பை, புளூடூத் என அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன. மேலும் தண்ணீர் உள்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும் சாலையில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.
ஸ்பீக்கர் போன்
போன் கால் செய்யும் வகையில் புதிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது ஜிப்ரானிக்ஸ் நிறுவனம். ஜிப்யுஎப்ஓ என்ற பெயரில் புதிய வகை புளூடுத் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் இந்த ஸ்பீக்கரில் கார்டுலெஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ஸ்மார்ட்போனை இந்த கார்டுலெஸ் உடன் இணைத்துக் கொள்ள முடியும். மேலும் கார்டுலெஸில் இருந்தே போன் செய்யமுடியும். அனைத்து வகைகளிலும் இந்த போனை இணைக்குமாறு போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை 2,900 ரூபாய்.
உடல் சமநிலைக் கருவி
நம் உடலில் இருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது என்பதை இந்தக் கருவி நமக்குத் தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் இதயத்துடிப்பு, எவ்வளவு கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது, எவ்வளவு நேரம் தூங்கி யுள்ளோம் என்பதை பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிவிக்கிறது. இது பேட்டரியில் இயங்கக்கூடியது.
சார்ஜிங் டேபிள்
ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஸ்மார்ட் வாட்ச் என மூன்று சாதனங்களையும் ஒரே இடத்தில் சார்ஜ் செய்ய பிரத்யேகமாக இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயணங்களின் போது எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் மற்ற போன்களை சார்ஜ் செய்வதற்கு ஏற்ப யுஎஸ்பி வசதியும் உள்ளது.
ஓட்டப்பந்தய பயிற்சியாளர்
ஓட்டப்பந்தய பயிற்சியாளர் என்னென்ன குறைகளைக் கண்டுபிடித்து சொல்வாரோ அவையனைத்தையும் தெரிவிக்கிறது இந்தக் கருவி. ஓடும் போது நமது வேகம், நாம் எடுத்து வைக்கும் ஒரு அடியின் தூரம் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் இந்தக் கருவியில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT