Published : 11 Jul 2016 10:19 AM
Last Updated : 11 Jul 2016 10:19 AM
பெருநகரங்களில் வாகனப் பெருக் கம் அதிகரிப்பது தவிர்க்க முடி யாததாகிவிட்டது. இதன் உப விளைவாக வாகனங்களை பார்க் செய்வது பெரும் பிரச்சினையாக உரு வெடுத்து வருகிறது. இடப்பற்றாக் குறைதான் இதற்கு முக்கிய காரணம். இதற்கும் தற்போது தீர்வு கண்டுள்ளது சீனா. ரோபோ மூலம் காரை பார்க் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி யுள்ளது சீன நிறுவனம்.
லேசர் வழிகாட்டுதல் மூலம் கார் களை இணையாக பார்க் செய்யும் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கெடா (Geta) எனும் இந்த நுட்பத்துக்கு பெயரிடப் பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் குறைந்த இடவசதி உள்ள இடங்களிலும் காரை பார்க் செய்ய முடியும்.
இதன் மூலம் 2 நிமிடங்களில் காரை பார்க் செய்துவிட முடியும். அதேபோல காரை வெளியில் எடுக்க 2 நிமிடமே போதுமானது. இதனால் காரை 360 டிகிரி கோணத்தில் மிகவும் குறைந்த இடவசதி கொண்ட இடத்திலும் பார்க் செய்ய முடியும். மனிதர்கள் வழிகாட்டுதலின்படி காரை நிறுத்துவதால் ஏற்படும் நேர விரயம், கார்களில் கீறல் விழுவது ஆகியன தவிர்க்கப்படும்.
பொதுவாக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஏற்படும் கீறலை காட்டி லும் காரை பார்க் செய்யும்போது ஏற் படும் கீறல்கள்தான் அதிகம். அந்தக் குறையையும் இந்த நுட்பம் போக்கி யுள்ளது. 33 வயதான மார்கோ வூ இந்த நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ நுட்பத்தை எந்த இடத்திலும் நிறுவி செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
சீனாவில் பிரதான நகர்களில் அடுத்த நான்கு ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கார்களை நிறுத்த இட வசதி அளிப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும். அதற்கு இந்த நுட்பம் மிகப் பெரிய தீர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடத்தில் இடம் காலியாக உள்ளது என்பதை கெடா சிக்னல் வெளிப்படுத்தும்.இந்த சிக்னலை கம்ப்யூட்டரில் உள்ள வரைபடம் உணர்ந்து அங்கு காரை நிறுத்த ரோபோவுக்கு உத்தரவிடும்.
இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவின் விலை 1.5 லட்சம் டாலராகும். இடப்பற்றாக்குறை உள்ள நகரங்களுக்கு இந்த நுட்பம் மிகப் பெரும் பொருட் செலவாக இருக்காது என்று மார்கோ வூ தெரிவித்துள்ளார்.
இப்போதே இந்த ரோபோ நுட்பத்தை வாங்கிப் பயன்படுத்த சிங்கப்பூர் மற்றும் லண்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. புதிதாக கட்டுமானங்களை உருவாக்கும் நிறுவனங்களும் இந்த ரோபோ கார் நிறுத்த நுட்பத்தைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக வூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரு நகரங்களில் கார் நிறுத்துமிடம் மிகப் பெரும் பிரச்சினை யாக உருவெடுத்து வருகிறது. எதிர்காலத்தில் ரோபோ நுட்பம் இங்கும் கைகொடுக்கும் என நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT