Published : 26 Sep 2016 10:56 AM
Last Updated : 26 Sep 2016 10:56 AM
மெட்ரோ ரயில் திட்டம் என்பது நகரங்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இதன் சேவை பெரிய பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும். லண்டனில் முதன்முதலாக கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் மின்சாரம் மூலம் ரயிலை இயக்கவும் திட்டமிட்டு இந்த ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளுக்கு இந்த திட்டம் விரிவடைய தொடங்கியது.
வளரும் நாடுகளுக்கு மிக தாமதமாகவே இந்த சேவை வந்துள்ளது. ஏனெனில் இதை அமைப்பதற்கு ஆகும் செலவு அதிகம். ஆனால் இந்தியாவின் இயங்கும் மெட்ரோ சேவைகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றன. டிக்கெட் விலை குறைவாக இருப்பதாலும் இதை அமைப்பதற்கு ஆன செலவு அதிகமாக இருப்பதாலும் இந்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் அடுத்த இருபது ஆண்டுகளில் இதனுடைய தேவை அதிகரிக்கும்போது இதன் செயல்பாடு இன்னும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் லாபத்துடன் இயங்க வாய்ப்புள்ளது. சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் இயங்கும் மெட்ரோவை பற்றி சில தகவல்கள்….
- ஸ்ரீதரன்
மெட்ரோ மேன் என்று அழைக்கப்படுபவர் இ.ஸ்ரீதரன். ஐஇஎஸ் அதிகாரியான இவர்தான் டெல்லி மெட்ரோ திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர். இவரது செயலை பாராட்டி டைம் பத்திரிகை வெளியிட்ட ஆசியாவின் நாயகர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றது.
# மெட்ரோ என்ற வார்த்தை பாரிஸ் மெட்ரோலிட்டன் என்ற வார்த்தையிலிருந்து உருவானது.
# வெனிசுலாவில் இயங்கும் மெட்ரோ சிஸ்டம்ஸ் மிகக் குறைவான விலையில் டிக்கெட் வழங்குகிறது. அங்கு குறைந்தபட்ச கட்டணம் இந்திய மதிப்பில் 8 ரூபாய்.
# நார்வே நாட்டில் இயங்கும் மெட்ரோ ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் இந்திய மதிப்பில் 335 ரூபாய்.
# சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏழு ரயில்களை பிரேசில் நிறுவனம் தயாரித்து தருகிறது. இதை தயாரித்து தர போடப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,471 கோடி.
# உலகிலேயே முதன் முதலில் பாதாள ரயில் சேவை ஆரம்பித்த நாடு இங்கிலாந்து. இங்கிலாந்தில் 1863-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
# அப்போதே 30,000 பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். தற்போது 117 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
# உலகிலேயே அதிக லாபத்துடன் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை ஹாங்காங் மெட்ரோ ரயில்.
# நியூயார்க் சிட்டி சப்வே மெட்ரோ ரயில் சேவையில் 468 நிலையங்கள் உள்ளன.
# உலகிலேயே அதிக செலவு மிக்க மெட்ரோ சிஸ்டம்ஸ் ஷாங்காய் மெட்ரோ. இந்த கட்டுமானத்தை அமைப்பதற்கு செலவான தொகை 38 பில்லியன் டாலர்.
# டோக்கியோ மெட்ரோ சிஸ்டம்ஸில் ஒரு நாளைக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை 87 லட்சம்
# இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ சேவை 1984-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
# பசுமை இல்ல வாயுக்களை உருவாவதலை தடுக்கிறது என்று டெல்லி மெட்ரோவுக்கு ஐக்கிய நாடுகள் சபை சான்றளித்துள்ளது.
# 2012-ம் ஆண்டு தகவலின் படி கொல்கத்தா மெட்ரோ நிறுவனம் ரூ. 215 கோடி செலவிட்டுள்ளது ரூ. 87 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
# உலகிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் சேவையில் டெல்லி மெட்ரோவின் இடம் 12
# 1998-ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஒரு நாளில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கு பயணிகள் எண்ணிக்கை 26 லட்சம்.
# 2015-ம் ஆண்டு டெல்லி மெட்ரோவின் வருவாய் 3,562 கோடி ரூபாய்
# குர்காவ்னில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை முழுவதும் தனியாருக்கு சொந்தமானது. ரேபிட் மெட்ரோ ரயில் குர்காவன் என்ற நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது.
இந்தியாவில் மெட்ரோ இயங்கும் நகரங்கள்
அகமதாபாத்
மும்பை
பெங்களூர்
டெல்லி
கொல்கத்தா
சென்னை
ஜெய்ப்பூர்
குர்காவ்ன்
உலகிலேயே மிக அழகான மெட்ரோ நிலையங்கள்
> டோல்டோ மெட்ரோ நிலையம், இத்தாலி
> கிவெஸ்கயா மெட்ரோ நிலையம், ரஷ்யா
> ராத்ஸ்ட் மெட்ரோ நிலையம், சுவீடன்
> டைல்வொர்க் மெட்ரோ நிலையம், ஹங்கேரி
> பார்மொசா மெட்ரோ நிலையம், தைவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT