Published : 09 Jan 2017 10:50 AM
Last Updated : 09 Jan 2017 10:50 AM

பறக்கும் வெள்ளை மாளிகை

உலகின் உச்சக்கட்ட பாதுகாப்போடு பயணத்தை மேற்கொள்பவர் அமெரிக்க அதிபர். அதிபரின் பாதுகாப்புக்காக அவர்கள் செய்திருக்க கூடிய ஒவ்வொரு விஷயமும் நம்மை பிரமிக்க வைக்கிறது. முக்கியமாக அதிபரின் விமான பயணம். அதிபருக்கென்று பிரத்யேக விமானங்கள், பாதுகாப்பு வசதிகள் இருக்கும். இந்த விமானத்தை பற்றியும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சில தகவல்கள்…

> மற்ற விமானங்களை போல் அல்லாமல், பைலட், துணை பைலட்டை தாண்டி, ஒரு பொறியாளர் ஒரு வழிகாட்டி ஆகியோரை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழு இந்த விமானத்தை இயக்குகிறது.

> இந்த விமானத்தை மிகப் பெரிய நிறுவனமான போயிங் வடிவமைத்துள்ளது.

> போயிங் 747 என்ற ரக விமானம்தான் ஏர்போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது.

> 1953ம் ஆண்டு அமெரிக்க அதிபர் சென்ற எல்சென்ஹோவர் விமானம், வர்த்தக விமானங்கள் செல்லும் வழித்தடத்தில் குளறுபடியால் தவறுதலாக சென்றுவிட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அமெரிக்க அதிபருக்காக உருவாக்கப்பட்ட விமானத்தின் பெயர்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன்.

> படுக்கையறை, குளியலறை, வரவேற்பு அறை, சிறிய ஆலோசனைக் கூடம் என அனைத்தும் இந்த விமானத்தில் உள்ளன. ஆலோசனைக் கூடத்தில் இருக்கும் பிளாஸ்மா டிவி மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியில் நாட்டு மக்களுக்கு கூட உரை நிகழ்த்த முடியும்.

> இந்த விமானம் நெருப்புப் பொறிகளை உமிழக்கூடிய வசதி கொண்டது.

> அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமான மாடல் போயிங் 747- 200பி ஜம்போ ரக விமானமாகும். அவர் பயணிக்கும் விமானத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாவது விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும், அலுவலக பணியாளர்களும் பயணிப்பர்.

> விமானத்தின் கீழ் பகுதியில் ரகசிய அறையில் பல்வேறு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடியோ அலைகளை செயலிழக்க செய்யும் கருவி, ரேடாரிலிருந்து விமானத்தை தப்பவைக்கும் கருவி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள் இதில் உள்ளன.

> தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் பழமை அடைந்து விட்ட காரணத்தால் அதன் பராமரிப்புப் பணிகள் மிகுந்த செலவீனமும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளன. இதையெடுத்து இரண்டு புதிய விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

> இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் இந்த புதிய விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

> படம் பிடிப்பது இந்த விமானத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிபரின் தனி அறை மற்றும் அலுவல்களை கவனிக்கும் அறை விமானத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

> பொதுவாக, காலநிலை சாதகமாக இல்லாத பட்சத்தில் விமானங்கள் தரையிறங்கும் இடங்கள் மாற்றப்படும். ஆனால், ஏர்போர்ஸ் ஒன் விமானம் எந்தவிதமான காலநிலையிலும், ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் கட்டாயம் தரையிறங்க வேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது இந்த விமானம்.

> அதிபர் பயணிக்கும் விமானத்திலேயே அவசர மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியரும் இருப்பர். மேலும், உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக இரண்டு சமையலறைகளும் உள்ளன.

> மணிக்கு அதிகபட்சமாக 925 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 13,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும். நடுவானில் பறக்கும்போதே, இந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். இதன் மூலம், ஏர்போர்ஸ் ஒன் பல மணி நேரம் பறக்க முடியும்.

> படுக்கையறை, குளியலறை, வரவேற்பு அறை, சிறிய ஆலோசனைக் கூடம் என அனைத்தும் இந்த விமானத்தில் உள்ளன. ஆலோசனைக் கூடத்தில் இருக்கும் பிளாஸ்மா டிவி மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியில் நாட்டு மக்களுக்கு கூட உரை நிகழ்த்த முடியும்.

> இந்த விமானத்தில் 87 தொலைபேசிகளும் 19 தொலைக்காட்சி திரைகளும் உள்ளன. மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வசதி இருக்கிறது.

> அணுகுண்டு தாக்குதல் மூலம் ஏற்படும் கதிரியக்கத்தை தடுக்கும் வசதிகளுடன் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்போது ஏவுகணை தாக்குதல்களை கூட சமாளிக்கும் வசதிகள் கொண்டது.

>அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானத்தில் 70 பேர் தாராளமாக பயணிக்க முடியும்.

> பொதுவாக, காலநிலை சாதகமாக இல்லாத பட்சத்தில் விமானங்கள் தரையிறங்கும் இடங்கள் மாற்றப்படும். ஆனால், ஏர்போர்ஸ் ஒன் விமானம் எந்தவிதமான காலநிலையிலும், ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் கட்டாயம் தரையிறங்க வேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது இந்த விமானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x