Published : 26 Sep 2016 10:45 AM
Last Updated : 26 Sep 2016 10:45 AM
கிமு 427 ஆம் ஆண்டு முதல் கிமு 347 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பிளாட்டோ, புகழ்பெற்ற பண்டைய கிரேக்க தத்துவஞானி மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். இசை, ஓவியம் மற்றும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். மேற்கத்திய பாரம்பரியத்தின் தத்துவ வளர்ச்சியில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். மேலும், மேற்கத்திய உலகின் முதல் உயர்கல்வி நிறுவனமான ஏதென்ஸ் அகாடமியை நிறுவியவர் இவரே. தனது ஆசிரியரான சாக்ரடீஸ் மற்றும் புகழ்பெற்ற மாணவர் அரிஸ்டாட்டிலுடன் இணைந்து மேற்கத்திய தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடித்தளத்தினை ஏற்படுத்தியவர்.
# நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது.
# தொடக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது.
# நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால், நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது.
# ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.
# இன்றைய கற்பவர் நாளைய தலைவர்.
# பரிசோதனை இல்லாத வாழ்க்கை, மதிப்புடைய வாழ்க்கை அல்ல.
# தேவை... கண்டுபிடிப்பின் தாய்.
# ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும், உன்னதமானதும் ஆகும்.
# நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை.
# எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
# எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம்.
# நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன், நல்ல எஜமானனாக இருக்க மாட்டான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT