Published : 02 Jan 2017 10:50 AM
Last Updated : 02 Jan 2017 10:50 AM
2009-ம் ஆண்டு டிரைவர் தேவைப்படாத கார்களை உருவாக்கப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தபோது அதைக் கண்டு வியந்தவர்கள் உண்டு. இது ஒருபோதும் சாத்தியமாகாது என்றோர் பலர். ஆனால் இன்று பல நாடுகளில் சோதனை ஓட்டமாகவும், சில நாடுகளில் புழக்கத்துக்கும் இத்தகைய கார்கள் வந்துள்ளன. புத்தாண்டில் பல நிறுவனங்களும் டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்க உள்ளன. அவை பற்றிய ஒரு முன்னோட்டம்.
2035-ம் ஆண்டில் அதாவது அடுத்த 20 ஆண்டில் 2 கோடி டிரைவர் இல்லாத வாகனங்கள் சாலையில் இயங்கும் என்று இத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆனால் வரும் ஆண்டில் இத்தகைய கார்களில் சில வசதி படைத்தவர் களின் கார் ஷெட்டுகளில் இடம்பெறக் கூடும்.
கூகுள்
தொடக்கத்தில் டொயோடா பிரியுஸ் காரில் தனது சோதனை முயற்சியைத் தொடங்கியது. அடுத்து 2012-ம் ஆண்டில் லெக்ஸஸ் ஆர்எஸ் 450 ஹெச் மாடல் கார்களில் இதை சோதித்துப் பார்த்தது. 2014-ம் ஆண்டில் முதல் முறையாக இந்நிறுவனமே ஒரு காரை வடிவமைத்து அதை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது.
இந்தக் காரில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள், பிற வாகனங்களை அறியும் உணர் கருவிகள் (சென்சார்ஸ்) பயன்படுத்தப்பட்டன.
மெர்சிடஸ்
இந்நிறுவனம் முதன் முதலில் 1980-ம் ஆண்டு மியூனிச் பல்கலை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ரோபோ காரை அறிமுகப்படுத் தியது. 2015-ம் ஆண்டில் விஷன் டோக்கியோ எனும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் காரை அறிமுகம் செய்தது.
இந்நிறுவனம் தயாரித்த பேட்டரியில் இயங்கும் கார், ரீசார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மூலம் 190 கி.மீ. தூரமும், இதில் உள்ள பியூயல் செல் மூலம் 790 கி.மீ. தூரமும் ஓடி சாதனை படைத்தது. இந்தக் காரின் இயந்திரம் அதி நுட்பமான செயல் பாடுகளைக் கொண்டிருந்ததால் இதில் ஒவ்வொரு முறை பயணமும் வித்தி யாசமான அனுபவத்தை அளிப்பதாய் இருந்தது.
டெல்பி
சர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் துறைக்குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் இந் நிறுவனம் 2015-ம் ஆண்டில் கார் தயா ரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியது. இந்நிறுவனம் ஆடி எஸ்ஓ5 மாடலை பேட்டரியால் இயக்கிக் காட்டியது. இதற்கு ரோட் ரன்னர் என பெயரிட்டு நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
இந்தக் காரில் 6 ரேடார்கள் உள்ளன. இவற்றில் 4 ரேடார்கள் குறுகிய தூரத் தில் வரும் பொருள்களை உணரும். பொருள்களை அறியும் வகையிலான 3 கேமிராக்கள் இதில் உள்ளன. 6 லிடார் கள் (ஒளி உணர் சென்சார்) உள் ளன. அத்துடன் உள்ளூர் சாலை அமைப்பை புரிந்துள்ள வழி காட்டியும் உள்ளது. இத் தகைய தொழில்நுட் பங்களை உள் ளடக்கிய இந் தக் கார் மூலம் விபத்துகளே ஏற்படாது என தெரிவித் துள்ளது.
நிசான்
இந்நிறுவனம் தனது பேட்டரி காரில் டிரைவர் தேவைப்படாத தொழில்நுட் பத்தை பயன்படுத்தியுள்ளது. இக் காருக்கு லீப் என பெயர் சூட்டியுள்ளது. இதில் மி.மீ அலை ரேடார், லேசர் ஸ்கேனர், கேமிரா மற்றும் ஹெச்எம்ஐ எனப்படும் மனித குறுக்கீடு தேவைப் படாத தொழில்நுட்பம் ஆகியன பின் பற்றப்படுகிறது. இதே தொழில்நுட் பத்தை தனது 5-வது தலைமுறை செரினா மாடல் கார்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆடி
டிரைவர் தேவைப்படாத கார் தயா ரிப்புக்கான முயற்சியை 2004-ம் ஆண்டி லிருந்தே மேற்கொண்டு வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள பாலைவனத் தில் இதை சோதித்துப் பார்த்துள்ளது. தனது ஏ7 மாடல் காரை டிரைவர் இல்லாத சோதனை ஓட்டத்துக்கு இந்நிறு வனம் பயன்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகள் மற்றும் ரேஸ் மைதானங் களிலும் இதை சோதித்துள்ளது. குரூயிஸ் கன்ட்ரோல், பாதை மாறுவதை உணர்த்தும் கருவி உள்ளிட்டவை இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். அமெரிக்காவில் புளோரிடா மற்றும் நெவடாவில் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தியுள்ள ஒரே கார் இதுதான்.
பிஎம்டபிள்யூ விஷன் பியூச்சர்
இந்நிறுவனத்தின் ஐநெக்ஸ்ட் கார் தான் டிரைவர் இல்லா காரின் முன் னோடியாக இருக்கும். இதே நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது கார்களில் பயன்படுத்த நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகர மாக செயல்படுத்த இன்டெல், மொபைல் ஐ ஆகிய தொழில்நுட்ப நிறுவனங் களுடன் கைகோர்த்துள்ளது பிஎம்டபிள்யூ.
வோல்வோ
டிரைவர் இல்லாத வோல்வோ கார்கள் இப்போது ஸ்வீடன் சாலைகளில் இயங்கு கின்றன. புத்தாண் டில் 100 வாடிக்கை யாளர்களுக்கு இக் கார்களை அளிக்க வோல்வோ திட்டமிட் டுள்ளது. எக்ஸ்சி90 வாகனத்தில் தானியங்கி பிரேக் வசதி உள்ளது. தானியங்கி கார் மோதி எவரும் உயிரிழக்கக் கூடாது என்ற இலக்கை 4 ஆண்டுகளுக்குள் எட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா எஸ்
பேட்டரி கார்களுக்கு புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனமும் டிரைவர் தேவைப் படாத கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி யுள்ளது. இந்தக் காரில் 2.8 விநாடிகளில் 90 கி.மீ. வேகத்தை எட்டிவிடலாம். இதில் உள்ள ஆட்டோ பைலட் நுட்பம் லேன் மாற்றம் உள்ளிட்டவற்றை உணர்த்தும். அதேபோல வாகன நெரிசலை அறியும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. மேலும் பார்க்கிங் செய்வதற்கு இடம் போதுமா என்பதையும் ஆட்டோ பைலட் நுட்பம் உணர்த்தும்.
ரோல்ஸ் ராய்ஸ் விஷன் நெக்ஸ்ட் 100
இந்த கார் முற்றிலும் தானியங்கி முறை யில் செயல்படும். அத்துடன் பயணிப் பவரின் தேவைக்கேற்ப இது இயங்கும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கார் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது. அதா வது இது பேட்டரியால் இயங்குகிறது.
தேவைகளை ஒட்டியே மனிதனின் கண்டுபிடிப்புகள் இருந்து வந்துள்ளன. ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியும் இதைத்தான் உணர்த்துகிறது. எதிர்காலத் தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள் இயற்கை வளத்தில் வறண்டு போகும் என்ற கணிப்பு ஒருபுறம். சூழலைக் காக்க வேண்டிய அவசியம் மற்றொரு புறம். அனைத்துக்கும் மேலாக வாகனங்களை இயங்குவதற்கான ஆள் பற்றாக்குறை ஒருபுறம். இவை அனைத் துக்கும் தீர்வாக வரும் ஆளில்லா, பேட்டரியில் இயங்கும் கார்கள்தான் எதிர்காலத்தில் சாலைகளில் கோலோச் சும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT