Published : 16 Jan 2017 12:04 PM
Last Updated : 16 Jan 2017 12:04 PM
1910 ஆம் ஆண்டு பிறந்த ஜான் வூடன் அமெரிக்க கூடைப்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர். விளையாட்டு வீரர்களுக்கான இவரது எளிமையான உத்வேக செய்திகள் மிகவும் புகழ்பெற்றவை. கூடைப்பந்து பயிற்சியாளராக தொடர்ச்சியான வெற்றிகளையும், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஆண்டின் சிறந்த தேசிய பயிற்சியாளராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விளையாட்டுலக வரலாற்றில் மிகவும் மதிப்பிற்குரிய பயிற்சியாளர்களுள் ஒருவராக அறியப்பட்ட ஜான் வூடன் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
# வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிகரங்களும் உண்டு, பள்ளத்தாக்குகளும் உண்டு. சிகரங்களை அதிக உயரத்திற்கும், பள்ளத்தாக்குகளை அதிக தாழ்விற்கும் செல்ல அனுமதிக்காதீர்கள்.
# திறமை கடவுளால் கொடுக்கப்பட்டது, பணிவாக இரு. புகழ் மனிதனால் கொடுக்கப்பட்டது, எளிமையாக இரு. அகந்தை உன்னால் கொடுக்கப்படுவது, கவனமாக இரு.
# வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும், உங்களோடு வாதாடக்கூடிய புத்திசாலிகள் உங்களைச்சுற்றி இருக்க வேண்டும்.
# உனக்கு நீ உண்மையாக இரு, மற்றவர்களுக்கு உதவி செய், ஒவ்வொரு நாளையும் தலைசிறந்ததாக மாற்று.
# சொற்பமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. பெரிய விஷயங்களின் உருவாக்கத்தை, சிறிய விஷயங்களே ஏற்படுத்துகின்றன.
# வெற்றி ஒருபோதும் இறுதியானது அல்ல, தோல்வி ஒருபோதும் மோசமானது அல்ல. எந்த நிலையாயினும் தைரியமே அவசியம்.
# நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால், உங்களால் எல்லோருக்கும் உண்மையாக இருக்க முடியும்.
# நீங்கள் தவறுகளே செய்யவில்லை என்றால், நீங்கள் எதுவுமே செய்யவில்லை.
# குடும்பம் மற்றும் அன்பு ஆகியவையே இந்த உலகில் மிக முக்கியமான விஷயங்கள்.
# நேற்று என்பது முடிந்துபோன ஒன்று. இன்று என்பது மட்டுமே இருக்கின்ற ஒரே நாள்.
# இளைஞர்களுக்கு விமர்சகர்கள் தேவையில்லை, முன்மாதிரிகளே தேவை.
# நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அதை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT