Published : 18 Jul 2016 10:56 AM
Last Updated : 18 Jul 2016 10:56 AM
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை எலன்ட்ரா கார்களை அறிமுகப்படுத்துகிறது. இந்தக் காருக்கான சாலை பரிசோதனைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அநேகமாக செப்டம்பரில் இந்தக் கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய எலன்ட்ரா கார் இரண்டு வித என்ஜின் வாய்ப்புடன் சந்தைக்கு வருகிறது. அதாவது 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் மாடல். இது 146 பிஹெச்பி திறன் கொண்டது. அடுத்தது 1.6 லிட்டர் கொண்ட சிஆர்டிஐ டீசல் என்ஜின் இதன் திறன் 134 பிஹெச்பி ஆகும்.
புதிய தலைமுறைக் காரில் ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு சிறப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளது. 8 அங்குல பொழுதுபோக்கு அம்சத்துக்கான திரை வசதி, நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.
ஃபோக்ஸ்வேகனின் ஜெட்டா, டொயோடா கொரோலா மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா மாடல் கார்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
காரின் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிகிறது.
அடுத்த ஆண்டு இந்தக் காரை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT