Published : 13 Jun 2016 10:03 AM
Last Updated : 13 Jun 2016 10:03 AM
தொகையைப் பார்த்தவுடன் இது மாநில பட்ஜெட் தொகை என்று நினைத்துவிட வேண் டாம். ஆண்டுதோறும் சரக்குப் போக்கு வரத்தில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதால் புகையில் கரையும் தொகைதான் இது.
சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந் தன. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குக் கட்டணம் மட்டும் குறைந்த பாடில்லை.
இதற்கான உண்மை கார ணம் என்ன தெரியுமா இதைக் கண் டறியும் முயற்சியில் கொல்கத்தாவின் ஐஐஎம் நடத்திய ஆய்வில் ஒரு மாநில பட்ஜெட் தொகையே புகையில் கரைந்து வீணாவது தெரியவந்துள்ளது.
சுங்கச் சாவடி மற்றும் நெடுஞ்சாலை வாகன பயன்பாட்டு மையம் (டோல் பிளாஸா) ஆகியவற்றில் வாகனங்கள் நிற்பதால் மட்டுமின்றி சாலைகளில் ஆங்காங்கே அதிகாரிகள், போலீஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை என்ற பெயரில நீண்ட நேரம் காத்திருக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி பெங்களூரு நெடுஞ்சாலையில் இது அதிக அளவில் இருப்பதும் - மும்பை சாலை மார்க்கத்தில் சற்று குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கியமான 28 தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 2011-12-ம் ஆண்டில் எந்த அளவுக்கு கால தாமதம் ஏற்பட்டதோ அதை அளவு கால தாமதம்தான் இப்போதும் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தனைக்கும் நான்கு ஆண்டுகளில் சாலை வசதிகள் மேம்பட்டிருப்பினும் வாகனங்கள் நின்று செல்வது குறையவே இல்லை.
சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் கால தாமதம் காரணமாக ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 660 கோடி டாலர் என்றால், இவ்விதம் நின்று செல்வதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு 1,470 கோடி டாலர் என தெரியவந்துள்ளது.
ரயில்கள் மூலமான சரக்கு போக்கு வரத்தை விட சாலை மார்க்கமான போக்குவரத்தையே பெரிதும் விரும்பு கின்றனர். ஓரளவு குறித்த நேரத்தில் சரக்குகள் சென்றுவிடும் என்ற நம்பிக்கையும், சரக்கை அனுப்ப எளிய வழியாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
பல பகுதிகளில் சாலைகளின் தரம் மிக மோசமாக இருப்பதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய அவசியம் நிகழ்கிறது. இதனால் எரிபொருள் விரயமாகிறது.
சாலை உபயோகிப்பு கட்டணம் (டோல் பிளாஸா) மற்றும் வரி விதிப்பு மையம் உள்ளிட்டவற்றில் பின்பற்றப்படும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிகளை இக்குழு பரிந்துரைத்துள்ளது.
பழைய வாகனங்களை அனுமதிப் பதால் ஏற்படும் இடையூறுகள், வாக னங்கள் மெதுவாக செல்வது உள்ளிட் டவற்றையும் தனது அறிக்கையில் ஐஐஎம் சுட்டிக் காட்டியுள்ளது.
கிராமத்தில் விளையும் கத்திரிக்காய் அங்கு அதிகபட்சம் ஒரு கிலோ ரூ. 10-க்கு விற்கப்படும். ஆனால் அது நகருக்கு வரும்போது ரூ. 40 ஆக உயர்வதன் காரணம் இப்போது புரிகிறதா?
கால தாமதத்துக்கு நாம் தரும் விலை அதிகம் அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT