Published : 01 Aug 2016 03:01 PM
Last Updated : 01 Aug 2016 03:01 PM
வாரன் பபெட் நடத்தும் பங்குதாரர் கூட்டம் போலவோ அல்லது குரு படத்தில் வருவது போலவோ பங்குதாரர் கூட்டங்கள் நிஜத்தில் நடப்பதில்லை. ஒவ்வொரு நிறுவன மும் தங்களுக்கு ஏற்ப பங்குதாரர் கூட்டங்களை நடத்துகின்றன. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் டிவிடெண்ட் பங்கு பிரிப்பு, இயக்குநர்கள் நியமனம் உள்ளிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவை யான பல முடிவுகள் எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் பரிசுகள் உள்ளிட்டவையும் வழங்குவது வழக்கம்.
வழக்கமாகக் கிடைப்பதை தாண்டியும் கூடுதலாக எதிர்பார்ப் பதுதானே மனிதமனம். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள் ளும் பங்குதாரர்களும் இதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். டிவிடெண்ட் கொடுப்பது மட்டும் போதாது, வேறு சலுகைகளும் வேண்டும் என்று பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தங்கக் காசு, பரிசுக் கூப்பன், வெளி நாட்டு பயணம் என பல எதிர் பார்ப்புகள் பங்குதாரர்களிடையே அதிகரித்து வருகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு ஹெச்டிஎப்சி வங்கியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த வங்கியின் வெள்ளிவிழா கொண்டாடுவதற்கு திட்டங்கள் இருக்கிறதா என்று பங்குதாரர்கள் கேள்வி எழுப்பினர். தவிர ஹெச்டிஎப்சி வங்கி லோகோ பதித்த தங்க நாணயம் பங்குதாரருக்கு வழங்க வேண்டும் என்று ஒரு பங்குதாரரும், போனஸ் பங்கு வழங்க வேண்டும் என இன் னொரு பங்குதாரரும் கோரிக்கை விடுத்தனர். இன்னொருவர் வங்கி லோகோ இருக்கும் குடை வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். இவையாவது ஒரு முறை வழங்கும் திட்டம் என்பதால் பரிசீலனையாவது செய்ய முடியும். பங்குதாரர்களின் மருத்துவ செலவை அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் ஒரு பங்குதாரர் தெரிவித்தார்.
இதேபோல ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டமும் சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நிறுவனத்தினரின் திருமண விழா வியன்னாவில் நடந்தது. அந்த திருமணத்துக்கு அழைக்கவில்லை என ஒரு பெண் பங்குதாரர் குற்றம் சாட்டினார். நீங்கள் அழைத்திருந்தால் என் சொந்த செலவிலேயே வந்திருப்பேன் என்றும் அவர் கூறினார். அடுத்து நடக்கும் திருமணத்துக்கு அழையுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார். விரைவில் ரக்ஷா பந்தன் வருகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன் என சூசகமாகத் தெரிவித்தார்.
ஹெச்யூஎல் ஆண்டு பொதுக் கூட்டமும் சமீபத்தில் நடந்தது. ஏற்கெனவே தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க வேண்டும் என கோரிக்கையை நிர்வாகத்திடம் வைத்தோம். அதனையே நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என பல முதலீட்டாளர்கள் வருத்தப்பட்டனர்.
பங்குதாரர்களின் கோரிக்கைக்கு நிறுவனங்கள் சாமர்த்தியமாக பதில் அளித்தன.
ஹெச்யூஎல் தலைவர் ஹரிஷ் மன்வானி கூறும்போது பங்குதாரர் கள் பரிசுகளை கேட்பதை விட ஹெச்யூஎல் பொருட்களை வாங்க லாம் என்று கூறினார். ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா பூரி கூறும்போது இயக்குநர் குழு இதனை பரிசீலிக்கும் என்று முடித்துகொண்டார்.
ஆனால் `செபி’ விதிமுறை களின்படி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பரிசுகள் வழங்கக் கூடாது. முதலீட்டாளர்கள் வெளிப் படையாக கேட்க ஆரம்பித்து விட்டதால் இப்போது கிடைக்கும் தேநீர் விருந்து கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. அனைத்தையும் `செபி’ பார்த்துக்கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT