Published : 30 Dec 2024 06:20 AM
Last Updated : 30 Dec 2024 06:20 AM
பொதுவாக முன்பெல்லாம் மத்திய பட்ஜெட் வந்த பிறகுதான் எந்தப் பொருளின் விலை உயரும்; எவற்றின் விலை இறங்கும்; எவற்றுக்கு மாற்றமில்லை. எது சரி எது தவறு? என்பது போன்ற விவாதங்கள் நடக்கும். இப்போது அடிக்கடி நடப்பது போல சிலருக்கு தோன்றலாம். காரணம், ஆண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிற ஜிஎஸ்டி கவுன்சிலும் அதன் முடிவுகளும்.
தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சர்வீஸ் டேக்ஸ் போன்ற நேரடி வரிகளையும், உற்பத்தி மீதான கலால், வாட் போன்ற சில மறைமுக வரிகளையும் மத்திய அரசு விதித்துக்கொண்டிருந்தது. அதேபோல, உற்பத்தி மீதான கலால் வரி, விற்பனை வரி போன்ற சில மறைமுக வரிகளை மாநில அரசுகள் வசூலித்துக் கொண்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT