Published : 11 Oct 2024 03:50 PM
Last Updated : 11 Oct 2024 03:50 PM

ரத்தன் டாடா: தொழில்முனைவோர் தலைமுறையை ஊக்கப்படுத்தியவர்!

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் அனிஷ் ஷா கூறுகையில், “ ரத்தன் டாடா என்பவர் தொழில்துறையில் மட்டும் வெற்றிபெற்றவராக கருதிவிட முடியாது. நேர்மை, பணிவு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய மதிப்புகளை உள்ளடக்கிய ஒரு முன்னுதாரண மனிதராகவும், தொழில்முனைவோர் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் அவரை ஃபிக்கி நினைவுகூருகிறது.

நெறிமுறை முதலாளித்துவம் குறித்த அவரது பார்வை மற்றும் சமூக நலனுக்கான சக்தியாக வணிகத்தை பயன்படுத்தியதற்கான அவரது முயற்சிகள் ஏனைய தொழில்முனைவோர் மட்டுமன்றி கார்ப்பரேட் தலைவர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது. எனவே, அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்" என்றார்.

சமூக ஊடகத்தில் இறுதி மடல்: ரத்தன் டாடா நேற்று முன்தினம் (புதன்) இரவு காலமானார். ஆனால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே வதந்தி பரவத் தொடங்கியது. இதை அறிந்து, “என்னை பற்றி சிந்திப்பதற்கு நன்றி” என்று தலைப்பிட்டு ரத்தன் டாடா கடந்த திங்கள் அன்று எழுதிய சமூக ஊடக பதிவு அவரது இறுதி மடலாக அறியப்படுகிறது. அதில்,

எனது உடல் நிலை குறித்து சமீபமாக உலாவும் வதந்திகளை அறிவேன். அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. வயோதிகம் மற்றும் சில உடல் உபாதைகள் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் எனக்குச் செய்யப்பட்டு வருகிறது. மற்றபடி என்னைப் பற்றிய கவலை வேண்டாம். நலமுடனே இருக்கிறேன். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களையும் ஊடகங்களையும் அன்புகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையுள்ள, ரத்தன் டாடா

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

குறைந்த விலையில் காரை தயாரித்து மக்களுக்கு வழங்குவது
ரத்தன் டாடாவின் கனவு திட்டமாகும். அப்படி, ரூ. 1 லட்சம்
விலையில் தயாரிக்கப்பட்ட டாடா நானோ காரை
கடந்த 2009-ம் ஆண்டு பிரிட்டிஷ் தூதர் விக்கி
டிரெடெல்லுக்குபரிசளித்த ரத்தன் டாடா.(கோப்பு படம்)
ரத்தன் டாடா, நாய்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
அவர் ‘கோவா’ என்ற நாயை வளர்த்து வந்தார்.
ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டிருந்த
அந்த இடத்தை விட்டு அது அகலவில்லை.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x