Published : 30 Oct 2023 08:31 AM
Last Updated : 30 Oct 2023 08:31 AM
தங்கம் நீண்ட கால அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் லாபம் கொடுப்பதாக பார்த்தோம். தங்க முதலீட்டை வங்கியில் வைப்பு நிதியாக வைப்பதைவிட சிறந்ததாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் வங்கி வைப்புக்கு சுமார் 7% வட்டி மட்டுமே கிடைக்கலாம். அதேநேரம் தங்கத்தின் விலை நாம் வாங்கிய பிறகு பாதகமாக கூட மாறலாம் அல்லவா? உண்மைதான், அதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நீண்டகால அடிப்படையில், எல்லா இலக்கங்களையும் தாண்டி தங்கம் மீண்டும் மேல்நோக்கி ஏறுகிறது. தேவைப்பட்டால், முடியும் என்றால், தங்கம் விலை குறையும்போது, இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
தங்கத்தை நீண்டகால அளவில் முதலீடு செய்வதற்கு ஒரு சரியான வழிமுறை, கோல்ட் பாண்ட் ஆகும். இதனை தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bond – SGB) என்று அழைப்பார்கள். இது மத்திய அரசினால் உருவாக்கப்படுவது மற்றும் ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடப்படுகிறது. ரிசர்வ் வங்கியானது 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை, இந்த தங்க பத்திரங்களை வெளியிடுகிறது. இதை வாங்குவதன் மூலம் நமக்கு என்னென்ன பலன் என்று பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT