Published : 23 Oct 2023 06:11 AM
Last Updated : 23 Oct 2023 06:11 AM

ப்ரீமியம்
நெருக்கடியில் ஆன்லைன் கேமிங் துறை

இன்றைக்கு இந்தியாவின் ஆன்லைன் கேமிங் தொழிற்துறையின் வருமானம் 3 பில்லியன் டாலராகும் (ரூ.25 ஆயிரம் கோடி). இது 2027-ம் ஆண்டு சுமார் 8.6 பில்லியன் டாலரைத் (ரூ.71 ஆயிரம் கோடி) தொடக்கூடும் எனவும், வளர்ச்சி விகிதம் சுமார் 27 சதவீதம் இருக்கும் எனவும் ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸும் (Federation of Indian Fantasy Sports – FIFS) டெலாய்ட் (Deloitte) ஆலோசனை நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆனால், கணிக்கப்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது போல வந்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சிலின் ஜுலை மாத அறிவிப்பு.

இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிகபட்ச வரியாக 28% விதிக்கப்பட்டிருக்கிறது. அது திறமை சார்ந்த விளையாட்டுகளாக (கேரம், செஸ் போன்றவை) இருந்தாலும் சரி அல்லது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளாக (சூதாட்டம், பந்தயம்/பணயம் சார்ந்தவை) இருந்தாலும் சரி ஒரே மாதிரியான வரிவிதிப்புதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x