Published : 02 Oct 2023 06:08 AM
Last Updated : 02 Oct 2023 06:08 AM
கனடா, இந்தியா இடையிலான உறவு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இந்த உறவு ஜனநாயகம், கலாச்சாரம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டவை. கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக சுமார் 19 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. இது அந்நாட்டு மக்கள் தொகையில் 5.2%. அதிலும் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கனடாவை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.
உலகத் தரமான கல்வி நிறுவனங்கள், அமைதியான வாழ்வியல் சூழல், எளிமையான விசா நடைமுறை, நியாயமான கல்வி கட்டணம், படிக்கும்போதே பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காரணமாக இந்திய மாணவர்கள் கனடாவை தேர்வு செய்கின்றனர். மேலும் படிப்பை முடித்த பிறகு 3 ஆண்டுகள் வரை அங்கேயே பணிபுரிவதற்கான வாய்ப்பும் நிரந்தர குடியுரிமையும் வழங்கப்படுவது முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT