Published : 11 Sep 2023 08:40 AM
Last Updated : 11 Sep 2023 08:40 AM

ப்ரீமியம்
வேகமெடுக்கும் விண்வெளி பொருளாதாரம்

‘‘இந்த வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே. இது எதிர்காலத்தில் இஸ்ரோ செயல்படுத்த இருக்கும் எல்லா விண்வெளி திட்டங்களின் வெற்றிக்கும் ஆரம்பம்’’ என்று சந்திரயான் – 3 வெற்றியின்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். அது இஸ்ரோவுக்கு மட்டும் வெற்றியல்ல, இந்திய பொருளாதாரத்துக்கே வெற்றி. நம் பொருளாதாரத்துக்கே ஒரு புதிய பாதையை திறந்துவிட்டிருக்கிறது சந்திரயான் 3 வெற்றி.

நிலவில் சந்திரயான்–3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. ஆனால், இத்துடன் சந்திரயான் திட்டங்கள் முடிந்துவிடவில்லை. நிலவில் இருந்து சாம்பிள் எடுத்துவரும் திட்டமாக சந்திரயான் திட்டங்கள் மேலும் தொடர வாய்ப்புள்ளன. ஜப்பானின் ‘ஜாக்சா’வும், இஸ்ரோவும் இணைந்து, நிலவின் துருவ ஆய்வுக்காக ‘லுாபெக்ஸ்’ திட்டத்தை 2024–25 ஆம் ஆண்டில் நிறைவேற்ற இருக்கின்றன. அடுத்த சந்திரயான் திட்டமான இதில், ரோவர் சாதனத்தை ஜப்பானும், லேண்டரை இஸ்ரோவும் தயாரிக்க உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x