உயிர் மூச்சு
மாசுபாடு: ராணியும் விலக்கல்ல!
பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபத்திடம் விலையுயர்ந்த கிரீடம், ஒரு தீவுப் பேரரசு, ஆடம்பரமான மாளிகை போன்ற எல்லாமே இருக்கின்றன. ஆனால், அவரும்கூடச் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து தப்ப முடியவில்லை. பிரிட்டனின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இருக்கும் கிராஸ்வெனார் பிளேஸ் சாலையில்தான் நைட்ரஜன் டைஆக்சைடு நச்சு வாயு பிரிட்டினிலேயே அதிகமாகப் பதிவாகி இருக்கிறது. இதைத் தடுக்க என்ன செய்யப் போகிறதோ பேரரசு?
