Published : 17 Sep 2013 12:45 PM
Last Updated : 17 Sep 2013 12:45 PM
“பூமிக்கு ஆபத்து”, “பூமியின் மீது மோத வால்நட்சத்திரம் வரப் போகிறது, அதனால் பூமி அழியப் போகிறது” என்பது போன்ற செய்திகளை அடிக்கடி படித்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பூமியின் மீது ஏதாவது ஒரு வால்நட்சத்திரம் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே மோதினாலும் பூமி அழிந்துவிடுமா?
பூமியை சுக்குநூறாக ஆக்குவதற்கான திறனுடன் விண்வெளியில் லட்சக்கணக்கான வால்நட்சத்திரங்கள் தூரத்தித்துரத்தி சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நல்லவேளையாக, பூமி மீது மோதினால் மிகவும் பயங்கரமான பாதிப்புகளை உருவாக்கக்கூடிய மிகப் பெரிய வால்நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன. பூமியில் இருந்து டைனோசார்களை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்த பிரம்மாண்ட வால்நட்சத்திரங்களைப் போன்ற வால்நட்சத்திரங்கள், 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூமியின் தலையில் வந்து விழ வாய்ப்பு இருக்கிறது என்று வானியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட சிறிய விண்கற்கள் பூமியின் மீது அன்றாடம் விழுந்து வந்தாலும் (மாலை-இரவு நேரங்களில் இவை விண்வெளியில் உரசி வரும்போது, எரிந்து தூள்தூளாவதை பார்த்திருக்கலாம்) 100 மீட்டர் சுற்றளவு கொண்ட பிரம்மாண்ட வால்நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே நம் தலையில் விழ வாய்ப்பு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT