Published : 23 Sep 2014 01:20 PM
Last Updated : 23 Sep 2014 01:20 PM
சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அதைப் பற்றி அறிந்து கொள்வதுதான். இதோ, நமது சுற்றுச்சூழல் பற்றி அதிர்ச்சியடைய வைக்கும் சில உண்மைகள், சில மாற்று வழிகள்:
# ஒவ்வொரு நிமிடத்துக்கும் 100 ஏக்கர் மழைக்காடுகள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.
# நாளிதழ்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 25 கோடி மரங்களைக் காப்பாற்ற முடியும்.
# அமெரிக்க நிறுவனங்கள் ஓராண்டில் பயன்படுத்தும் காகிதத்தை மட்டும் வைத்துப் பூமிப் பந்தை மூன்று முறை சுற்றிவிடலாம்.
# நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 கோடி கிலோ குப்பை உருவாகிறது. அப்படியென்றால், ஆண்டுக்குச் சராசரியாக 3650 கோடி கிலோ குப்பை.
# கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் 10 லட்சம் கடல் உயிரினங்கள் ஆண்டுதோறும் இறந்துபோகின்றன.
# சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பதில் ஒரு இந்தியரைப் போல 35 மடங்கும், வங்கதேசத் தவரைப் போல 140 மடங்கும், ஆப்பிரிக்கரைப் போல 250 மடங்கும் ஓர் அமெரிக்கர் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கிறார்.
# வளர்ந்த, பணக்கார நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தை, வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தையைப் போல 40 மடங்கு அதிகப் பொருட்களை வாங்குகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
# ஒரு கண்ணாடி குடுவையோ, புட்டியோ முழுமையாக மக்கிப் போக 4,000 ஆண்டுகள் ஆகும். அதனால் உடையும்வரை கண்ணாடிப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.
# அலுமினியப் பாத்திரங்களைக் காலாகாலத்துக்கும் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியும். அதேநேரம் உணவுப்பொருட்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல.
# குளிர்பானங்கள், மற்றப் பொருட்கள் அடைக்கப்பட்டுவரும் அலுமினியக் குவளையை மறுசுழற்சி செய்வதன் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தால், ஒரு டிவியை மூன்று மணி நேரத்துக்கு இயக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT