Last Updated : 03 Nov, 2018 12:01 PM

 

Published : 03 Nov 2018 12:01 PM
Last Updated : 03 Nov 2018 12:01 PM

சேவல் கொடி 05: முன்னோடி தென்னிந்தியச் சேவல்கள்

1883-ல் சயட்-கன்-எ-ஷாகுட் (Sayd-gan-i shawkati) என்று உறுதிமொழி நூலின் ஒரு பகுதியான  முர்ஹ் நாம், சண்டைச் சேவல்களைப் பற்றிய முதல் பதிவு. அதை வாசித்தபோது சண்டைச் சேவல் இனங்கள், ‘அசில்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தெரிந்தது. மேலும் சிறந்த சண்டைச் சேவல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

வெள்ளை நிற அலகு, சிவப்பு வரி ஓடிய கண்கள், அளவான கொண்டைப்பூ அமைப்பு, தசைப்பற்று அற்ற தாடையும் இறகுகளும், கம்பியைப் போல உருட்டான கழுத்தெலும்பு, முக்கியமாக மஞ்சள் நிறக் கண்கள் இருக்கக் கூடாது ஆகிய அம்சங்களை அந்த நூல் குறிப்பிடுகிறது. மேலும் இந்த அம்சங்களுடன் பயிற்சி, பராமரிப்பு, நிறப் பாகுபாடு, நோய்த் தடுப்பு எனப் பட்டியல் இட்டுகிறது. அத்துடன் சிறந்த சேவல்கள் என ஹைதராபாத் அசில்களை முன்னிறுத்துகிறது.

இதன் மூலம் அந்த நூல் குறிப்பிடுவது தென்னிந்தியச் சேவல்கள்தாம் எனலாம்.

முர்ஹ் நாமுக்கு அடுத்தபடி சண்டைச் சேவல் குறித்த விரிவான குறிப்பு என்றால் ஜெயூ மூர் எனலாம். அதில் சில பகுதிகள் அசில்களைப் பற்றியும் அவை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் கூறுகிறன்றன. மிகச் சிறிய தலைப் பூவும், கண்ணுக்குத் தெரியாத சிறிய காதுகளும், விரிந்த மார்பும், முதுகுப் பகுதி தொடக்கதில் விரிந்து முடிவில் குறுகியும், உள்வாங்கிய கண்களும் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறது ஜெயூ மூர். ‘முர்க் கானா’ என்றால் சேவல்களுக்கான வீடு.

கவாஜா முஹம்மது ஐலி கான் கிலீஜ் என்பவர் 80க்கும் மேற்பட்ட சேவல் இனங்களைப் பராமரித்து வந்தார் என்றும் அவற்றுள் தென் இந்திய சேவல்களும் அடக்கம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஹைதராபாத் அசில்.  மன்னர் இரண்டாம் சார்லஸுக்கு அசில்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தமிழகப் பாளையக்காரர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அளவில் சேவல்கட்டு பழக்கத்தில் இருந்தது. எட்டயபுரம் அரண்மனையில் சண்டைச் சேவல்கள் பராமரிக்கப்பட்டுவந்தன.

ஹைதராபாத் அசில்தான் ராம்பூர் அசில்களுக்கு மூதாதையாராக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர் கார்லஸ் ஃபின்ஸ்டர்பஸ் குறிப்பிடுகிறார். மேலும் இது தென்கோடி இந்தியாவில் உருவான இனம் என்று கூறி ஹைதராபாத் அசிலை, குலங் என்கிறார். இது நமது சேவல்களைப் பற்றிய தெளிவை அளிக்கிறது. தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சேவல்களுக்குத்தான் குலங் (Kulang) என்னும் பெயரில்தான் அழைக்கப்படுகிறது.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x