Published : 28 Dec 2024 06:12 AM
Last Updated : 28 Dec 2024 06:12 AM

ப்ரீமியம்
மீன்வளப் பேரிடரின் காலம் | கூடு திரும்புதல் 27

காலத்தையும் கடலின் போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு மரபார்ந்த கடற்குடிகள் மீன் வளத்தைக் கணித்துவந்துள்ளனர். பருவம் தவறாமல் மீன்கள் வந்து கொண்டிருந்தன, கடற்குடிகளின் கணிப்புகளும் சரியாகவே இருந்தன. அன்றைக்கு நிலவிவந்த காலநிலையின் சீர்மையினால் அது சாத்தியமானது.

பதினாறு வகைக் காற்று, அவை சார்ந்த கடல் நீரோட்டங்கள், கதிரவன், நிலவு, விண்மீன்களின் நகர்வுகளை வைத்துக் கொண்டு வானிலையையும் மீன்வளத்தையும் கணித்த நிலை மாறிவிட்டது. நவீனத் தொழில் நுட்பங்கள் மரபறிவைக் கிட்டத்தட்டத் தேவை யற்ற ஒன்றாக ஆக்கிவிட்டிருக்கின்றன. கட்டுமரமும் சிறு படகும் கடற்குடியைக் கடலுக்கு நெருக்கமாக வைத்திருந்தன. நவீனத் தொழில்நுட்பங்கள் அவர்களை ஆழ்கடலுக்கு இட்டுச்சென்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x