Published : 21 Dec 2024 06:13 AM
Last Updated : 21 Dec 2024 06:13 AM

ப்ரீமியம்
பல்லுயிர் பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பயணம் செய்வதில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மட்டுமல்ல. அது ஒரு பல்லுயிர்ப் பாரம்பரியத் தலம் என்கிற புரிதலை ஏற்படுத்தி, அரிட்டாபட்டிக்குத் தொடர்ந்து பயணம் செய்வதற்கான உந்துதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியவர் மறைந்த சூழலியல் ஆர்வலர் ரவி.

மலைக் குன்றுகளாலும் நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருக்கும் அரிட்டாபட்டிக்கு எத்தனை முறை பயணம் செய்தாலும், ஏதோ ஒரு புதிய அம்சத்தை அந்த ஊரும் அந்த ஊரைச் சுற்றி இருக்கக்கூடிய பல்லுயிர் வாழிடமும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அரிட்டாபட்டியில் இருக்கும் புகழ்பெற்ற குடைவரைக் கோயிலையும் சமணர் படுக்கை யையும் பார்க்கச் சென்றிருந்தோம். அரிட்டா பட்டி, அவற்றைச் சுற்றியுள்ள குன்று களிலும் ஊர்களிலும் உள்ள இயற்கை, சூழலியல் சார்ந்த பிரச்சினைகனையும் அது தொடர்பான பல விஷயங்களையும் கற்றுக்கொடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x