Published : 19 Aug 2023 06:04 AM
Last Updated : 19 Aug 2023 06:04 AM
அசாமில் 2020 இல் ஏற்பட்ட எண்ணெய், எரிவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு 9,000 பேர் இடம்பெயர்ந்தனர். கடந்த வாரம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) முதன்மை அமர்வு அவர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்குமாறு அசாம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 2020இல் அந்த விபத்தால் ஏற்பட்ட தீ ஒரு பேரழிவின் தடத்தை விட்டுச்சென்றது.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்த அந்தத் தீயினால், திப்ரு சைகோவா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள கிராமங்களின் சூழலியல் பாதிக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் பல வீடுகளை எரித்த தீயைக் கட்டுப்படுத்த லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டது. அங்கு உள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் கச்சா எண்ணெய் கலந்தது.
யானைகளின் எண்ணிக்கை: கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள தாகவும், கேரளத்தில் யானைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகவும் சமீபத்தில் அந்த மாநிலங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 2017இல் 6,049 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2023 இல் 6,395 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2017இல் 2,761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2023இல் 2,961 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், கேரளத்தில் அதே காலகட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை 9,026இல் இருந்து 4,306 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை குறைவுக்கு யானைகளின் இடம்பெயர்வு காரணமாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT