Published : 12 Aug 2023 06:00 AM
Last Updated : 12 Aug 2023 06:00 AM
அற்றுப்போய்க்கொண்டிருக்கும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அதன் பழைய புத்தகக் கடை ஒன்றில் சில வாரங்களுக்கு முன் மேய்ந்துகொண்டிருந்தேன். கையில் அகப்பட்டது பைண்டு செய்யப்பட்ட ஒரு நூல். அசிரத்தையுடன் புரட்டியபோது, ‘விஞ்ஞான அறிவு நூல் - நம்மைச் சூழ்ந்துள்ள கடல் - விலை ரூபாய் ஒன்று’ என்கிற அட்டைப்படம் துணுக்குற வைத்தது. ‘ரேச்சல் கார்சனின் நூலாக இருக்குமோ?’ என அவசரமாகத் திருப்பி ஆசிரியர் பெயரைப் பார்த்தபோது, திகைக்கவைக்கும் வகையில் என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்தது.
‘மௌன வசந்தம்’ (The Silent Spring) என்கிற நூலின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மேற்குலகில் தீவிரமடையக் காரணமாக இருந்தவர் ரேச்சல் கார்சன். அவர் கடல் பற்றி எழுதிய மூன்று நூல்களில் (Sea trilogy) ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பைத்தான் நான் கண்டெடுத்திருந்தேன். வெ.ச.அநந்த பத்மநாபன் என்பவரின் மொழிபெயர்ப்பில், தென் இந்திய சயன்ஸ் கிளப் என்கிற அமைப்பின் வழியாக ஹிக்கின்பாதம்ஸ் வெளியீடாக ஆகஸ்ட் 1966இல் இந்நூல் (The Sea Around Us, 1951) வெளியாகியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT