Published : 04 Nov 2017 11:24 AM
Last Updated : 04 Nov 2017 11:24 AM
வ
ண்ணத்துப்பூச்சிகள் அழகானவை. எல்லோராலும் விரும்பப்படுபவை. அதேநேரம் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழு பருவத்தில் பலரும் பார்த்திருக்க மாட்டோம். கம்பளிப் புழுக்கள் பலராலும் விரும்பப்படுவதில்லை. அது மேனியில் பட்டால் அரிக்கும், தடிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள். இப்படிப் பலரும் அருவருக்கத்தக்கதாகக் கருதும் புழுவிலிருந்து முழு உருமாற்றம் அடைந்தே அழகான வண்ணத்துப்பூச்சி பிறக்கிறது.
கம்பளிப் புழுக்கள் தங்களைச் சுற்றியே கூடு கட்டிக்கொள்வதற்கு முன் நிறைய இலைகளைச் சாப்பிடும். ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியும் தான் விரும்பும் தாவரங்களிலேயே முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழு குறிப்பிட்ட தாவரத்தின் இலைகளைச் சாப்பிட்டு முழுமையாக வளர்ச்சி அடைந்த பிறகு தன்னைச் சுற்றியே கூடு அமைத்துக்கொள்ளும். இந்தக் கூட்டுப்புழுவிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சி வெளிவரும்.
பால் வரும் தாவரங்கள் பல கம்பளிப் புழுக்களுக்குப் பிடித்தமான உணவு. ஒரு முறை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்குச் சென்றிருந்தபோது, எருக்கஞ்செடியின் ஏதோ ஒரு புழு வித்தியாசமாக நெளிந்துகொண்டிருந்தது. அது ஏற்கெனவே கடித்து மென்றிருந்த எருக்க இலைகள் தென்பட்டன.
அந்தக் கம்பளிப்புழு உணர்கொம்புகள், முட்தூவிகளைக் கொண்டிருந்தது. அது எந்த வண்ணத்துப்பூச்சியின் முதிராத வடிவம் என்பது தெரியவில்லை. அதேநேரம், அது அதிகம் விரும்பும் எருக்கஞ்செடியின் இலையை சாப்பிட்டுக்கொண்டிருந்ததால், நிச்சயமாக இது ஒரு வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுவாகவே இருக்க வேண்டும் என்ற திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT