Last Updated : 25 Mar, 2023 06:07 PM

 

Published : 25 Mar 2023 06:07 PM
Last Updated : 25 Mar 2023 06:07 PM

தமிழக பொதுப்பணித் துறையில் பயிற்சிப் பணி... - மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 500 பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: Graduate apprentice - 355 | Technician (Diploma) apprentice - 145 | மொத்தம் - 500

பயிற்சி விவரம்: ஓராண்டு கால பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். Graduate apprentice பயிற்சிக்கு மாதம் ரூ.9000, Technician (Diploma) apprentice பயிற்சிக்கு மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

தகுதி: Graduate apprentice பயிற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Technician (Diploma) apprentice பயிற்சிக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பயிற்சி பெற விண்ணப்பிப்பவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mhrdnats.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதி: விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். http://www.mhrdnats.gov.in/ என்கிற தளத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/02/PWD_Notification_2023-24.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரார்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இத்தேர்வில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x