Published : 08 Feb 2023 06:06 PM
Last Updated : 08 Feb 2023 06:06 PM
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. தமிழ்நாடு அரசு தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அழகுசாதனவியல் பயிற்சி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ. 45,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சி கட்டணத்தை தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்குத் தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசம். 45 நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி: பத்தாம் வகுப்ப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பயிற்சி விவரம்: ‘காஸ்மெட்டாலஜி’, ‘ஹேர் ட்ரெஸிங்’ பயிற்சியில் ஆரம்ப நிலை முதல் தொழில்முறை வரை கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவு செய்பவருக்கு NSDI சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
பயிற்சி நடைபெறும் இடம்: மயிலாப்பூர், சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://iei.tahdco.com/beautician_reg.php) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://tahdco.com/admin/apply_online/Beautician_intro.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT