Last Updated : 13 Dec, 2022 06:32 AM

 

Published : 13 Dec 2022 06:32 AM
Last Updated : 13 Dec 2022 06:32 AM

சேதி தெரியுமா?

டிச.3: சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் உலகளாவிய விமானப் பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 48ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2018 இல் 102ஆவது இடத்தில் இருந்தது.

டிச.4: ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் அமர்வு ராஜஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உதயப்பூரில் நடைபெற்றது.

டிச.5: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைத்தின் (என்சிபிசி) தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பொறுப்பேற்றார்.

டிச.6: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மெட்ரோவில் 3.14 கி.மீ. தொலைவு ஈரடுக்குப் பாலம் உலகின் நீண்ட ஈரடுக்குப் பாலமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

டிச. 7: டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக மாநகராட்சியைக் கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக பாஜக வசம் மாநகராட்சி இருந்தது.

டிச. 7, 9: வங்கக் கடலில் உருவான புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்கிற பெயர் சூட்டப்பட்டது. இப்புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது.

டிச.8: குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் 156 இடங்களில் வெற்றிபெற்று ஏழாவது முறையாக பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. இமாச்சல பிரதேசத் தேர்தலில் 40 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

டிச.9: இந்தியாவின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவராக மேக்னா ஆலாவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x