Last Updated : 13 Sep, 2022 10:05 AM

 

Published : 13 Sep 2022 10:05 AM
Last Updated : 13 Sep 2022 10:05 AM

சேதி தெரியுமா?

செப்.2: இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவருக்கான தேர்தலில் பாய்சுங் பூட்டியாவை தோற்கடித்து கல்யாண் சவுபே வெற்றிபெற்றார்.

செப். 4: 27 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அறிவித்தார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் இவர்.

செப்.5: தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டது.

செப். 6: இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்தார்.

செப்.7: தலைநகர் டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ பாதையின் பெயர் ‘கர்தவ்ய பாத்’ (கடமைப் பாதை) எனப் பெயர் மாற்றப்பட்டது.

செப்.8: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் காலமானார். இங்கிலாந்தில் அதிகபட்சமாக 70 ஆண்டுகள் ராணியாக இருந்தவர் இவர்.

செப்.8: 2022-23 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்திய அளவில் தேர்வு எழுதிய 17,64,571 பேரில் 9,93,069 பேர் தேர்ச்சிபெற்றனர். தமிழகத்தில் தேர்வு எழுதிய 1,32,167 பேரில் 67,787 பேர் தேர்ச்சிபெற்றனர்.

செப்.9: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 223-ன் படி, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம். துரைசாமி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x