Last Updated : 06 Sep, 2022 09:10 AM

 

Published : 06 Sep 2022 09:10 AM
Last Updated : 06 Sep 2022 09:10 AM

சேதி தெரியுமா?

ஆக.26: இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை முதன்முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆக.26: 2022ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் 46 பேர் கொண்ட பட்டியலில் தமிழகத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரனும், புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த ராஜாவும் இடம்பெற்றனர்.

ஆக.27: ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ் மானிய உரங்கள் அனைத்தும் ‘பாரத்’ என்கிற பெயரில் அக்டோபர் முதல் விற்பனை செய்யப்பட இருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

ஆக. 28: உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்துக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆக.30: சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் மிகைல் கோப்ரசேவ் (91) காலமானார். சோவியத் யூனியனின் கடைசி அதிபராகப் பணியாற்றிவர் இவர்.

செப்.2: ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த உத்தரவை ரத்துசெய்தது.

செப்.3: மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தென்னிந்திய முதல்வர்கள் பங்கேற்ற தென்னிந்திய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x