Published : 12 Jul 2022 09:20 AM
Last Updated : 12 Jul 2022 09:20 AM
ஜூலை 1: மகாராஷ்டிர முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூலை 2: 2035 ஆம் ஆண்டில் இந்தியாவில் நகர்ப்புற மக்கள்தொகை 67.5 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஜூலை 4: டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவின் சாதனையை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முறியடித்தார்.
ஜூலை 4: தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னையில் கையெழுத்தாகின.
ஜூலை 6: மாநிலங்களவை நியமன எம்.பி.களாக இசையமைப்பாளர் இளையராஜா (தமிழகம்), தடகள வீராங்கனை பி.டி.உஷா (கேரளம்), சமூக சேவகர் வீரேந்திர ஹெக்டே (கர்நாடகம்), திரைக்கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் (ஆந்திரம்) ஆகியோரை நியமித்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 7: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கு ஊதியத்தை வழங்கும் நடைமுறையை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தியிருக்கிறது.
ஜூலை 8: கரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை வேற்றுருவாக மாறியது, இந்தியாஉள்ளிட்ட நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 8: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே (67) நாரா நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT