Published : 22 Jun 2022 05:16 PM
Last Updated : 22 Jun 2022 05:16 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 23

தொகுப்பு- ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 20) அன்று பகுதி - 22இல் ‘தமிழ்நாடு - 5 (பண்டைய தமிழகம் - 1)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நமது இந்தியா - 7 (புவியியல் - 1)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நமது இந்தியா - 7 (புவியியல் - 1)

1. காலநிலையைக் குறிக்கும் சொல்லான ‘கிளைமா’ எம்மொழியிலிருந்து வந்தது?
அ. லத்தீன் ஆ. கிரேக்கம்
இ. எகிப்து ஈ. சீனம்

2. வளிமண்டலத்தில் மந்த வாயுக்கள் எத்தனை சதவீதம் உள்ளன?
அ. 2% ஆ. 3%
இ. 1% ஈ. 4%

3. கீழ்க்கண்டவற்றுள் ஓசோன் அடுக்கு எது?
அ. டிரோபோஸ்பியர்
ஆ. ஸ்ட்ரோடோஸ்பியர்
இ. அயனோஸ்பியர்
ஈ. எக்ஸோஸ்பியர்

4. காற்று அழுத்தத்தின் அளவு சராசரியாகக் கடல் மட்டத்தில் எத்தனை மில்லிபார்கள் இருக்கும்?
அ. 800 ஆ. 910
இ. 760 ஈ. 1010

5. ஒவ்வொரு 100மீட்டர் உயரத்திற்கும் எத்தனை மில்லிபார் காற்றின் அழுத்தம் குறையும்?
அ. 10 ஆ. 5
இ. 20 ஈ. 100

6. புவி மையக்கோடு மண்டலம் (Equator) எத்தனை டிகிரி வட மற்றும் தென் அட்சங்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
அ. 23.5° ஆ. 12.5°
இ. 10° ஈ. 5°

7. புவியின் மேற்பரப்பில் சுமார் எத்தனை கி.மீ. உயரம் வரை காற்று பரவியுள்ளது?
அ. 100 ஆ. 250
இ. 400 ஈ. 500

8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
வெப்பக் காற்று இடம்
அ. ஃபிரிக்பீல்டர் ஆஸ்திரேலியா
ஆ. லூ இந்தியா (தார்)
இ. சின்னூக் வடக்கு இத்தாலி
ஈ. சிராக்கோ சகாரா

9. இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே எரிமலை எங்குள்ளது?
அ. லட்சத்தீவு
ஆ. அந்தமான்
இ. கச்சத்தீவு
ஈ. கோவா

10. அலுமினிய உருக்கு ஆலை கேரள மாநிலத்தில் எங்குள்ளது?
அ. ஆல்வாய் ஆ. ஆலப்புழை
இ. கோட்டயம் ஈ. கொச்சி

11. தமிழ்நாட்டில் சுனாமி தாக்கிய நாள் எது?
அ. டிசம்பர் 25, 2004
ஆ. டிசம்பர் 26, 2004
இ. டிசம்பர் 25, 2005
ஈ. டிசம்பர் 26, 2005

12. இந்தியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு (NMDA) ஏற்படக் காரணமான பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இந்திய அரசு எந்நாளில் அமல்படுத்தியது?
அ. டிசம்பர் 23, 2004
ஆ. டிசம்பர் 26, 2004
இ. டிசம்பர் 23, 2005
ஈ. டிசம்பர் 26, 2005

13. ஜாவார் வெள்ளிச் சுரங்கம் அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
அ. கர்நாடகம் ஆ. ராஜஸ்தான்
இ. பிஹார் ஈ. மத்தியப் பிரதேசம்

14. உலக அளவில் மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில், எந்த மாநிலத்தில் மைக்கா அதிக அளவில் கிடைக்கிறது?
அ. கர்நாடகம் ஆ. ராஜஸ்தான்
இ. பிஹார் ஈ. மத்தியப் பிரதேசம்

15. தமிழ்நாட்டில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
அ. பனங்குடி ஆ. காமலாபுரம்
இ. புவனகிரி ஈ. சிதம்பரம்

16. கடல்நீரின் உப்புத் தன்மையால் அந்நீரின் அடர்த்தி என்னவாகும்?
அ. குறையும் ஆ. அதிகரிக்கும்
இ. மாறாது ஈ. இவற்றில் எதுவுமில்லை

17. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
திட்டம் வருடம்
அ. புலிகள் பாதுகாப்பு - 1973
ஆ. சிங்கம் பாதுகாப்பு - 1972
இ. முதலை பாதுகாப்பு - 1975
ஈ. யானைகள் பாதுகாப்பு - 1982

18. உயிர்கோளக் காப்பகமான மானாஸ் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ. ஜார்க்கண்ட் ஆ. அசாம்
இ. குஜராத் ஈ. கோவா

19. விண்மீன்கள் பெரும்பாலும் எந்த வாயுக்களால் ஆனவை?
அ. நைட்ரஜன், ஆக்சிஜன்
ஆ.நைட்ரஜன், குளோரின்
இ. ஹைடிரஜன், ஹீலியம்
ஈ. நைட்ரஜன், ஹைடிரஜன்

20. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. மிகப்பெரிய துணைக்கோள் - கானிமேடு
ஆ. மிகச்சிறிய துணைக்கோள் - டீமோஸ்
இ. பச்சைக் கோள் - வெள்ளி
ஈ. சிவப்புக் கோள் - செவ்வாய்


பகுதி 22இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்

1. இ. மருதம் - மீன் பிடித்தல் (வேளாண்மை)

2. ஈ. முருகன் (சேயோன்)

3. அ. கரிகாலன்

4. ஆ. மணு

5. இ. தோமாரம் ஈட்டி

6. ஆ. புகார்

7. அ. கலிங்கம்

8. ஆ பொங்கல்

9. இ. அல்லங்காடி

10. ஈ. முசிறி

11. அ. ஆதிச்சநல்லூர்

12. ஈ. பிரான்ஸ்

13. ஆ. ரோம்

14. ஆ. பாண்டிச்சேரி

15. இ. உப்பு விற்பவர்

16. அ. தாய்லாந்து

17. ஆ. A-2, B-1, C-4, D-3

18. இ. கிரேக்கம்

19. அ. தொல்காப்பியம்

20. ஈ. குடிக்காடு (கடலூர் அருகில்)

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x