Published : 20 May 2022 04:05 PM
Last Updated : 20 May 2022 04:05 PM

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 9

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 18) அன்று பகுதி-8 இல் இந்தியா - 3 (அரசமைப்பு - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு - 3
தமிழக வரலாறு - அ

1. 1863இல் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி ஒன்றைத் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் பல்லாவரம் பகுதியில் முதன்‌முதலாகக் கண்டறிந்தவர் யார்?
அ) வில்லியம் கிங்
ஆ) ராபர்ட் பூருஸ்பட்
இ) வில்லியம் ஜோன்ஸ்
ஈ) மார்ஷல்

2. தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட உலோகம் எது?
அ) செம்பு ஆ) தங்கம்
இ) இரும்பு ஈ) ஈயம்

3. தமிழகத்தில் பழைய மண்தாழிகள் கிடைக்கப்பெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) திருநெல்வேலி
ஆ) விருதுநகர்
இ) கன்னியாகுமரி
ஈ) மதுரை

4. பழங்காலத்தில் தமிழ் எழுத்தான பிராமி எழுத்துக்களைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு எது?
அ) உத்திரமேரூர்
ஆ) குடுமியான் மலை
இ) கழுகுமலை
ஈ) சிதம்பரம்

5. இமயத்திலிருந்து கற்களைக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை வடித்த சேர மன்னர் யார்?
அ) ஜடவர்மன்
ஆ) செங்குட்டுவன்
இ) இரும்பொறை
ஈ) சேரலாதன்

6. சங்க காலத்தில் போர்வை என அழைக்கப்பட்ட ஊர் எது?
அ) கரூர்
ஆ) குளித்தலை
இ) முசிறி
ஈ) பேட்டவாய்த்தலை

7. கோவலனுக்குத் தவறாக தண்டனை அளித்த பாண்டிய மன்னன் யார்?
அ) ஜடவர்மன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) சுந்தர பாண்டியன்
ஈ) வீர பாண்டியன்

8. கும்பகோணம் மகாமகக் குளத்தைப் புதுப்பித்த நாயக்க மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) கோபால நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

9. தஞ்சாவூரை ஆண்ட முதல் நாயக்க மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) செவப்ப நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

10. மதுரை நாயக்கர் ஆட்சியில் முதல் மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) செவப்ப நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

11. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் மராத்திய மன்னர் யார்?
அ) முதலாம் பாஜிராவ்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) சிவாஜி
ஈ) பாஸ்கரராவ்

12. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழர் யார்?
அ) கட்டபொம்மன்
ஆ) மருது பாண்டியன்
இ) வேலுநாச்சியார்
ஈ) புலித்தேவன்

13. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த ஆண்டில் பிறந்தார்?
அ) 1721 ஆ) 1761
இ) 1781 ஈ) 1791

14. தஞ்சாவூரில் 'சரஸ்வதி மஹால்' நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ) சிவாஜி
ஆ) முதலாம் சரபோஜி
இ) இரண்டாம் சரபோஜி
ஈ) இரண்டாம் பாஜி ராவ்

15. மேட்டூர் (ஸடேன்லி) நீர்த்தேக்கம் கட்டப்பட்ட ஆண்டு எது?
அ) 1924 ஆ) 1928
இ) 1930 ஈ) 1934

16. சேரன்மாதேவி என்கிற இடத்தில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி முகாம் அமைத்தவர் யார்?
அ) வ.உ.சிதம்பரனார்
ஆ) சுப்ரமணிய சிவா
இ) வ.வே.சு. அய்யர்
ஈ) சுப்ரமணிய பாரதியார்

17. வேலூர் கோட்டை கலகம் எந்த ஆண்டில் நடைபெற்றது?
அ) 1706 ஆ) 1806
இ) 1860 ஈ) 1896

18. சர் தாமஸ் மன்றோ மூலம் தமிழகம் முழுவதும் ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்ட வருடம் எது?
அ) 1820 ஆ) 1826
இ) 1840 ஈ) 1896

19. மாசிமகம் யாருடைய முக்கியத் திருவிழாவாகக் கருதப்பட்டது?
அ) சோழர்கள். ஆ) சேரர்கள்
இ) பாண்டியர்கள் ஈ) பல்லவர்கள்

20. கங்கைகொண்டசோழபுரம் என்கிற நகரை நிறுவியவர் யார்?
அ) ராஜராஜன்
ஆ) முதலாம் ராஜேந்திரன்
இ) இரண்டாம் ராஜேந்திரன்
ஈ) முதலாம் பராந்தகன்


பகுதி 8இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்


1. இ) மொராக்கோ

2. அ) 368 (1)

3. ஆ) 284

4. இ) கொல்கத்தா. (1862)

5. ஈ ) 361

6. இ) 2019

7. அ) 384

8. ஆ) 1911

9. ஈ) 243

10. ஆ) 9-12-1946

11. இ) 2015

12. இ) 1942

13. ஈ) சச்சிதானந்த சின்ஹா

14. அ) 1976-42வது

15. ஆ) A-4, B-3, C-2, D-1

16. ஈ) பிரதம மந்திரி ரோஜ்ஹர் யோஜனா (PMRY) - 1996 (சரியான ஆண்டு - 1993)

17. அ) தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை சட்டம் - 1980 (சரியான ஆண்டு - 1987)

18. ஆ) விகிதாசார பிரதிநிதித்துவம்

19. இ) அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்

20. அ) A-1,B-,2, C-3,D-4

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x