Published : 12 Apr 2022 11:00 AM
Last Updated : 12 Apr 2022 11:00 AM
மார்ச் 31: நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் உள்ள பகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
ஏப்.1: இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) இயக்குநர் ஜெனரலாக டாக்டர் எஸ். ராஜு பொறுப்பேற்றார்.
ஏப்.2: ஆந்திரப் பிரதேசத்தின் லெபக் ஷியில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் மற்றும் ஒற்றைக்கல் நந்தி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஏப்.3: நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இது ஆஸ்திரேலியா வெல்லும் ஏழாவது கோப்பை.
ஏப்.4: பிஹாரில் உள்ள ஜெய்நகரையும் நேபாளத்தின் குர்தாவையும் இணைக்கும் 35 கி.மீ. குறுக்கு ரயில் பாதையில் தொடக்க ஓட்டம் நடைபெற்றது.
ஏப்.4: 2022 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக் பட்டம் வென்றார்.
ஏப்.5: ஹிமாச்சல பிரதேசத்தில் 9ஆம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
ஏப்.7: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT