வெளியாகிவிட்டது இந்து தமிழ் இயர் பூக்

வெளியாகிவிட்டது இந்து தமிழ் இயர் பூக்

Published on

ஐ.ஏ.எஸ். டி.என்.பி.எஸ்.சி.உள்ளிட்ட அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் கடந்த 3 ஆண்டுகளாகப் பயனளித்து வரும் ‘இந்து தமிழ் இயர்புக்’கின் புதிய பதிப்பு வெளியாகிவிட்டது. 2022இல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் புத்தகம் போட்டித் தேர்வர்களுக்கு உத்தரவாதமாகப் பயன் தரும்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம், அதில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்ப் பாடத்தாளில் வெற்றிபெறுவதற்கு வழிகாட்டியாக பண்டைத் தமிழ் இலக்கியங்கள் குறித்த போட்டித் தேர்வு வழிகாட்டி ‘இந்து தமிழ் இயர்புக்’கில் இடம் பெற்றுள்ளது. சமீபகாலமாக கவனம் பெற்றுவரும் தமிழகத் தொல்லியலின் வரலாறு குறித்த விரிவான சிறப்புக் கட்டுரையும் உள்ளது.

ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும், என்ன செய்தால் இந்தத் தேர்வுகளில் வெல்லலாம் என்பது குறித்த தனித்துவமான ஆலோசனைகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஆட்சிப் பணி அதிகாரிகள் இந்தப் புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்துக்குப் பங்களித்துள்ளனர்.

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ இல் பல பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 275. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications

புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:

‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque

அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2022, இந்து தமிழ் திசை,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in