Last Updated : 21 Dec, 2021 11:13 AM

 

Published : 21 Dec 2021 11:13 AM
Last Updated : 21 Dec 2021 11:13 AM

சேதி தெரியுமா?

டிச.12: பிரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுவது தொடர்பாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ காலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர மக்கள் ஆதரவளித்தனர்.

டிச.14: பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

டிச.15: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழகம் வந்த 47 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.

டிச.15: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயத்துடன் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். இதன்மூலம் விபத்தில் பலினானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தது.

டிச.16: 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தைப் பிரிக்கும் வகையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

டிச.16: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்தும் அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டிச.16: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

டிச.17: சூரியனை ஆய்வுசெய்ய முதன் முறையாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நுழைந்து புதிய அத்தியாயம் படைத்திருக்கிறது.

டிச.17: ‘நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x